சினிமாவிற்கு முன்னரே சென்னைக்கு ஓடிவந்த ரஜினிகாந்த்… பட்டினி, பசியால் கிடந்த சோகம்!..

by Akhilan |
சினிமாவிற்கு முன்னரே சென்னைக்கு ஓடிவந்த ரஜினிகாந்த்… பட்டினி, பசியால் கிடந்த சோகம்!..
X

Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பு பயிற்சி எடுக்க முதலில் சென்னை வரவில்லை. அதற்கு முன்னரே இரண்டு முறை படிக்க பிடிக்காமல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்த கதை இருக்கிறது. ஆனால் அந்த நாட்கள் ரஜினியின் டைரியில் எழுதப்பட்ட கருப்பு தினங்கள் தான் என்பதே சோகம்.

பெங்களூரில் அமைந்து இருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.முடித்தார் ரஜினிகாந்த். அப்போ 16 வயதான ரஜினி சீர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் அப்பா கல்லூரியில் சேர்க்க முடிவெடுத்தார். தந்தையின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, கல்லூரியில் பி.யு.சி படிப்பில் சேர்ந்தார். சில மாதங்கள் படித்தவர். பிடிக்காமல் கையில் இருந்த 200 ரூபாயுடன் சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

ஆனால் சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் அப்போது இல்லை. வேலைக்காகவே கிளம்பிவிடுகிறார். முதல் சில நாட்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார். பின்னர் ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அந்த வேலை பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் பெங்களூருக்கு டிரெயின் ஏறினார். அங்கு சென்று படிப்பை நிறுத்தினார். அங்கும் ஒரு மளிகைக் கடையில் வேலையில் சேர்ந்தார்.

அந்த வேலையும் பிடிக்காமல் போனது. மீண்டும் சென்னை பயணம். இந்த முறை ரொம்ப மோசமானது. சென்னையில் வேலை தேடி அலைந்த சமயம், வுட்லேண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்" படத்தை போய்ப்பார்த்தார். அது ரொம்ப பிடித்து போக, சின்ன சின்ன வேலைகள் பார்த்து அதில் சம்பளம் எடுத்து சினிமா பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டார்.

இதையும் படிங்க: 18 முறை விஜயகாந்துடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்… ஜெயிச்சது யாரு? வாங்க பார்க்கலாம்!..

காலையில் தான் பிரச்னையில்லாதவர் என நம்பி விடுதலை செய்தனர். இது ரஜினியை ரொம்பவே பாதித்தது. மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விட முடிவெடுத்து கிளம்பிவிட்டார். ஆனால் கையில் காசில்லை. இருந்தாலும் வெறி, டிரெயின் சீட்டின் அடியில் படுத்துக்கொண்டார். காலை நல்லமுறையாக பெங்களூர் சென்றுவிட்டார். ஆனால் வீட்டினர் இவர் மீது பல நாட்கள் கோபமாகவே இருந்தார்களாம்.

Next Story