More
Categories: Cinema History Cinema News latest news

நான் எப்ப அவர் மாதிரி ஆகுறது!. நடிகையிடம் புலம்பிய ரஜினிகாந்த்.. இவ்வளவு நடந்திருக்கா?!..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கமல் ரஜினி என இருவரும் போட்டி போட்டு கொண்டு பல திரைப்படங்களில் நடித்து வந்தனர். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தனர். ஆனால் பின் இருவரும் இணைந்து நடித்தால் இருவருமே வளர முடியாது என எண்ணி இருவரும் தனித்தனியே நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் தொடக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் இவர்களுக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன.  இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் கமலே ஹீரோவாகவும் ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..

ஏனெனில் ரஜினி சினிமாவில் நுழையும்போதே வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புதான் அவருக்கு அமைந்தது. பின் மெல்ல மெல்ல தனது விடாமுயற்சியின் மூலம் பைரவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வய்ப்பையும் பெற்றார் ரஜினிகாந்த்.

இவர்கள் என்னதான் சினிமாவில் யார் பெரியவர் என போட்டி போட்டாலும் நிஜத்தில் சிறந்த நண்பர்களும் கூட. இவர்களின் போட்டி ஒரு ஆரோக்கியமான போட்டியாகவே இருந்து வந்தன. தற்போது கூட இவர்கள் இருவரின் படங்களான முத்து மற்றும் ஆள்வந்தான் திரைப்படங்கள் ஒரே நாளில் ரீரிலிஸ் ஆகி தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகின்றன.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

ரஜினி தமிழில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாகவே அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்தது நடிகர் கமல்ஹாசன். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கியிருந்தார்.

ரஜினியை முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலசந்தரே ரஜினியின் குருவாவார். இப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய இருவருமே புதுமுகங்கள்தான். இப்படத்தில் கமலுக்கு சம்பளமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாம். ஸ்ரீதேவிக்கோ சம்பளமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.

ஆனால் வில்லனாக நடிக்கும் ரஜினிக்கு சம்பளமாக வெறும் 2000 ரூபாய்தான் கொடுக்கப்பட்டதாம். அதன்பின் பல படங்களிலும் கமலைவிட ரஜினிக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. அப்போது ரஜினி ஒரு முறை ஸ்ரீதேவியிடம் ‘கமல் போல் நானும் வளர வேண்டும். மேலும் அவர் வாங்கும் தொகையை போல் சம்பளம் வாங்க வேண்டும்’ எனும் ஏக்கத்தில் பேசினாராம். இதனை ஸ்ரீதேவியே ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது அப்படி வருத்தப்பட்ட ரஜினிகாந்த் சில வருடங்களில் கமலை விட அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:சிவக்குமாரின் பேச்சை கேட்காத சூர்யா – கார்த்தி?… எல்லா பிரச்சனைக்கும் இதுதான் காரணமா?!..

Published by
amutha raja

Recent Posts