ஜெய்சங்கரை பத்தி தப்பாக பேசினாரா ரஜினிகாந்த்?… கடுப்பாகி கத்திய சூப்பர்ஸ்டார்.. என்ன நடந்தது?

by Akhilan |
ஜெய்சங்கரை பத்தி தப்பாக பேசினாரா ரஜினிகாந்த்?… கடுப்பாகி கத்திய சூப்பர்ஸ்டார்.. என்ன நடந்தது?
X

Rajinikanth: பொதுவாக ரஜினிகாந்த் தன் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை யாரையுமே போட்டியாக நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் அவர்கள் குறித்து மோசமாக விமர்சிக்க மட்டாராம். அதை அவர் படத்தில் வைக்கவும் அனுமதித்தது இல்லையாம். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் ரஜினிகாந்த்.

இப்படி இருந்த ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்பகாலங்களில் ரொம்பவே கோபமாக இருப்பாராம். யோசிக்காமல் பேசும் குணமும் அவருக்கு இருந்ததாம். எதிராளிக்கு புரியும்படி பொறுமையாக விளக்கி சொல்ல மாட்டாராம். கடகடவென சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவது அவர் வழக்கமாம். அப்படி இருக்க ஒருமுறை சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தியுடன் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு தமிழில் ‘க்’ தெரியாது!.. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது… கலாய்த்த பிரபலம்…

அப்போ அங்கு வந்த திரைப்பட கல்லூரி மாணவர் ஒருவர், நாம் இங்கு படித்து விடுகிறோம். டிகிரி என்ற ஒன்றை கையில் வாங்கி விடுகிறோம். ஆனால் வெளியில் சென்று வேலை கிடைப்பது வரை நாம் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என அந்த மாணவர் இழுக்க கடுப்பாகி விட்டாராம் ரஜினிகாந்த்.

என்ன சொன்ன? உன் வயசுல நீ பேசுற பேச்சா இது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் அளவுக்கு வர வேண்டும் என நினை. அப்போது தான் ஒரு ஜெய்சங்கர் அளவுக்காகவது வர முடியும் என்றாராம். ஆனால் விதி அங்கே தான் விளையாடியது. இந்த விஷயம் தப்பாகி ஜெய்சங்கரை ரஜினிகாந்த் மட்டம் தட்டி பேசிவிட்டதாக பத்திரிக்கையில் செய்தியாகி வெளிவந்தது.

இதையும் படிங்க: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடுகள்.. வருங்கால கணவருடன் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படம்

இதனால் ரொம்பவே கோபமாக ரஜினிகாந்த் அதற்கு மறுப்பு சொல்லியே ஆகவேண்டும் என தன்னுடைய கடுப்பை வெளிப்படுத்தினாராம். நான் பிலிம் இன்ஸ்டியூட்டில் பேசிக்கொண்டு இருந்த போது ஜெய் சங்கரை மட்டம் தட்டியதாக செய்திகள் வந்தது. அது உண்மையில்லை. என்னிடம் மாணவர் ஒருவர் நடிப்பு தொழிலை குறை சொன்னார். முடித்துவிட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என இழிவாக பேசினார்.

நான் செய்யும் தொழிலை அவர் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. அதை கண்டிக்க நினைத்தேன். உன் மேல நம்பிக்கை வைத்து நல்ல நடிகனாக வேண்டும் என நினை. அப்போது தான் சிவாஜியாக நினைத்தால் ஜெய்சங்கராக வர முடியும் என்றேன். நான் ஒரு கம்பேரிஸனாக மட்டுமே அதை சொன்னேன். கோலிவுட்டில் நடிகர் திலகம் சிவாஜியின் நிலை, நண்பர் ஜெய் சங்கரின் நிலை, என் நிலை இது எல்லோரும் அறிந்த ஒன்றே எனவும் காட்டமாக பேசினாராம்.

இதையும் படிங்க: படுதோல்வியை சந்தித்த லால் சலாம்!. 8வது நாள் வசூல் இவ்வளவுதானா?!.. ரஜினி ரசிகர்கள் பேரதிர்ச்சி..

Next Story