கூலி படத்திற்காக ரஜினி எடுத்த ரிஸ்க்!. இப்படி ஆகிப்போச்சே!.. இப்படி செய்யலாமா லோகேஷ்?!.

Published on: September 4, 2024
coolie
---Advertisement---

Coolie: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ஜெயிலருக்கு முன் ரிலீஸான சில படங்கள் ரஜினிக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. அண்ணாத்த படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் ரஜினிக்கு ஒரு மெகா வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் வேட்டையன் படத்தில் நடிக்க துவங்கினார் ரஜினி. இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இது ஒரு பேன் இண்டியா படம் என்பதால் பஹத் பாசில், ராணா, அமிதாப்பச்சன் என பலரும் உள்ளே வந்தார்கள்.

இதையும் படிங்க: பாலியல் புகார்!.. நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை!.. விளாசிய நடிகை!…

இப்படம் போலீசார் செய்யும் என்கவுண்டருக்கு எதிரான படம் என சொல்லப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் என்கவுண்ட்டரில் இறந்தவர்களின் குடும்பங்கள் என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என புரிந்துகொண்டு அதற்கு எதிராக போராடுகிறார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கூட்டணி அமைத்திருப்பதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

#image_title

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினி மழையில் நனைந்து கொண்டே நடிப்பது போல காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்கள். செயற்கை மழை அவரின் உடலுக்கு ஒத்துவரமால் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

அதனால், சாதரண நீருக்கு பதில் சுடுநீரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், அதுவும் ரஜினிக்கு ஒத்துவராமல் போய் அவரின் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட இப்போது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்களாம். எனவேதான், ரஜினி சென்னை திரும்பிவிட்டார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த்தான் நடிக்கனும்னு கட்டாயம் ஏன்! அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.