தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் கலைஞராக திகழ்ந்தவர் சூப்பர் சுப்பராயன். 1980களில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் சூப்பர் சுப்பராயன் பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் சூப்பர் சுப்பராயனிடம் ஒரு இளைஞர் உதவியாளராக சேர்கிறார். அப்போது சூப்பர் சுப்பராயன் பணியாற்றும் பல திரைப்படங்களுக்கு உதவியாளராக செல்கிறார் அந்த இளைஞர். அந்த சமயத்தில் ஒரு ரஜினிகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் சுப்பராயனோடு உதவியாளராக சென்றார் அந்த இளைஞர்.
அங்கே ரஜினிகாந்த்தை பார்த்து ரஜினிகாந்த் போலவே நடப்பது, ரஜினிகாந்த் போலவே நடனமாடுவது என அவரை போலவே செய்துகொண்டிருந்தாராம். இதனை கவனித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் ஒரு நாள் அந்த இளைஞரை அழைத்து “உனக்கு சினிமாவுல என்ன ஆகனும்ன்னு ஆசை?” என கேட்டாராம்.
அதற்கு அந்த இளைஞர், “எனக்கு நடனத்தில் ஆர்வம் உண்டு. ஆனால் அசோஷியேஷனில் சேர்வது மிகவும் கடினமான காரியம்” என கூறியிருக்கிறார். உடனே ரஜினி தனது சிபாரிசு கடிதத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்.
ரஜினியின் மேல் உள்ள மரியாதை காரணமாக அந்த இளைஞரை சேர்த்துக்கொண்டனர். அதன் பின் அவர் நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் நடனத்தை கற்றுக்கொண்டார். பின்னாளில் அவர் மிகப் பிரபலமான நடன இயக்குனராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் வளர்ந்தார்.
இவ்வாறு ரஜினிகாந்த்தின் உதவியால் மிகப் பெரிய நடன இயக்குனர் ஆன அந்த இளைஞர்தான் ராகவா லாரன்ஸ். இன்று வரை அவர் ரஜினியின் மீது எந்தளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…