Connect with us

Cinema History

ரஜினியின் இந்த மாஸ் காட்சி வெறும் ஒரு மணி நேரத்தில் எடுக்கப்பட்டதா.?! சத்தியமா நம்ப முடியலேயேபா.!

சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதமாக தங்களது ஷூட்டிங்கை வடிவமைப்பாளர்கள். சிலர் தனக்கு தேவையான காட்சி வரும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடேக் செய்து எடுப்பர். கௌதம் மேனன் தனது படத்தின் காட்சிகள் முதலில் ஷாட்டில் வர வேண்டும் என நினைப்பார். முதல் டேக் ஒரு அற்புதமான நிகழ்வு அதை அப்படியே படமெடுத்துவிட வேண்டும் என நினைப்பார்.

சில இயக்குனர்கள் அன்று ஒரு நாள் முழுவதும் கால்சீட் இருந்தாலும், தேவைப்படும் காட்சி மதியம் முடிந்துவிட்டால், பேக்கப் செய்து விட்டு நாளை எடுக்க வேண்டியது நாளை பார்த்து கொள்ளலாம் என்று கிளம்பி விடுவர்.

அப்படித்தான் பாட்ஷா படத்தை இயக்கும்போது சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் நடந்துள்ளது. சுரேஷ்கிருஷ்ணா தான் எடுக்க வேண்டிய காட்சியை மதியமே ரஜினியை வைத்து எடுத்து முடித்து விட்டார். அதனால் ஒரு மூன்று மணி அளவில் பேக்கப் செய்து அனைவரும் கிளம்ப தயாராக இருந்தனர்.

இதையும் படியுங்களேன் – அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்.! இந்த கதை எங்கே ஆரம்பிச்சிருக்குக்குனு நீங்களே பாருங்க…

அப்போது அங்கு வந்த அப்பட தயாரிப்பாளர் இன்னும் இரண்டு மணி நேரம் மிச்சம் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு ஏதேனும் காட்சிகள் இருந்தால் எடுத்து விடுங்கள் எனக்கு கூற, இதற்கு ரஜினியும் சம்மதித்துள்ளார். உடனே ஒரு காலேஜ் பிரின்சிபால் ரூம் செட் அமைத்து உடனடியாக பாட்ஷா படத்தில் வரும், ‘தங்கச்சிக்கு காலேஜ் நிர்வாகியிடம் சீட் வாங்கும் காட்சி’ எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அப்பேர்பட்ட மாஸ் காட்சி எடுக்கப்பட்டது. அந்த மரண மாஸ் காட்சி தற்போது வரை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் ஃபேவரிட் ஆன ஒன்று.

சினிமாவில் எப்போதும் எதார்த்தமாக நடக்கும் சம்பவங்கள் சில நேரம் காலத்திற்கும் அழியாத நிகழ்வாக மாறி விடும். அப்படி ஒரு நிகழ்வு தான் பாட்ஷா படத்தில் அந்த ஒரு மணி நேரத்திற்குள் நடந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top