கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்… கல்லா கட்ட களமிறங்கும் லைக்கா…

Super Star Rajinikanth
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் ரஜினிகாந்த்தை இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஒரு திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார் எனவும் மற்றொரு திரைப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதர்வாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.

Aishwarya Rajinikanth and Atharvaa
மேலும் இத்திரைப்படத்தின் Pre Production பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனம் இதற்கு முன் ரஜினிகாந்தை வைத்து “2.0” திரைப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் தற்போது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

Rajinikanth with Lyca team
சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் பாகம் 1” திரைப்படம் லைக்கா நிறுவனத்திற்கு மாபெரும் லாபத்தை பெற்றுத்தந்துள்ளது. இந்த நிலையில்தான் லைக்கா நிறுவனம் ரஜினிகாந்த்தை இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.