More
Categories: Cinema History Cinema News latest news Uncategorized

இரண்டு ரூபாயிற்கு மேல் பணம் இல்லாமல் போலீஸில் இருந்து தப்பித்து ஓடிய ரஜினிகாந்த்… சுவாரஸ்ய சம்பவம்!

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் கல்லூரி கால அனுபவமே சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து போலீஸிடம் சிக்கி பின்னர் தப்பித்த சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானதும் புதிதாக படங்கள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எந்த வாய்ப்பும் வரவில்லை. கையில் பணமில்லாமல் தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. தீபாவளிக்கு தன் வீட்டினருக்கு புது துணி எடுக்க ஆசைப்பட்டு கொண்டு இருந்தாராம்.

இதையும் படிங்க: விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..

சரி கொஞ்ச நாள் பொறுத்து பார்க்கலாம். இல்லையென்றால் ஊருக்கு சென்று மீண்டும் கண்டெக்டர் வேலையில் சேர்ந்துவிடும் முடிவெடுத்தாராம். நண்பர்களிடம் இதை சொன்ன போது, ஊர் திரும்புவதற்காகவா இரண்டு வருடங்கள் சிரமப்பட்டு படிப்பை முடித்தாய். கொஞ்சம் பொறுமையாக இரு. நல்லது நடக்கும் என்றார்களாம்.

அவர் காத்திருப்புக்கு பலனாக தீபாவளிக்கு முன்னதாகவே ஒரு படம் ரஜினிக்கு ஒப்பந்தமானது. ஒரு சிறிய தொகை அட்வான்ஸ் பணமும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டினருக்கு தேவையான தீபாவளி டிரஸ்களை முதலில் வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த நாள், ரயிலில் பெங்களூர் செல்வதற்கு டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய சென்ட்ரல் சென்றாராம்.

நண்பர் ஒருவருடன் அண்ணா சாலை புகாரியில் டிபன் சாப்பிட்டு விட்டு சென்ட்ரல் செல்ல பஸ்ஸைப் பிடிக்க கிளம்பினாராம். சாந்தி வரை சென்று சாலையைக் கடந்து செல்ல பொறுமையில்லாதவர். ஹோட்டலுக்கு அருகிலேயே சாலையை கடந்தாராம். இதில் டிராபிக் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுவிட்டார். அப்போது அந்த சாலையை தவறாக கடந்தால், அபராதம் விதித்து விடுவார்கள்.

இதையும் படிங்க: சரோஜா தேவியா?.. ஜெயலலிதாவா?!.. எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு தட்டி தூக்கியது யார் தெரியுமா?!..

இதனால் ரஜினி மற்றும் அவர் நண்பருக்கு இணைந்து ஒரு தொகையை கட்ட சொன்னார்களாம். அவர்கள் சொன்ன தொகையைக் கேட்டு ரஜினியே அதிர்ச்சியடைந்து விட்டார்.  அவர்களிடம் கெஞ்சிப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பணம் இல்லைன்னா போலீஸ் ஸ்டேஷன் வாங்க என்று அழைத்தனராம். ரஜினி நடிகர் என்று சொல்லியும் ஒன்றும் வேலைக்காகவே இல்லையாம். எதிரே இருந்த மற்றொரு போலீஸ்காரரிடம் அனுப்பி வைத்து பணம் கட்டச் சொல்லி விட்டு செல்கிறார் ஒரு போலீஸ்காரர்.

அந்தப் போலீஸ்காரர் அருகில் செல்ல அங்கு சிலர் கூடி நின்றனர். அவர் பின்புறமாக நின்று யோசித்த ரஜினி கையில் இருப்பதை கணக்கு போட்டாராம். ரஜினியின் டிக்கெட்டுக்கு 30 ரூபாய். திரும்பி பஸ்ஸில் வர ஆகும் செலவு போக மீதி இரண்டு ரூபாய்க்கு மேல் பணமில்லையாம்.

இதில், திடீரென ரஜினிக்கு ஐடியா தோன்ற அருகில் இருந்த நண்பரிடம் கண் ஜாடை காட்டினாராம். அடுத்த நொடி இருவரும் மடமடவென்று பஸ் நிறுத்தம் நோக்கி நடந்துவிட்டனர். வந்த பஸ்ஸை பிடித்து சென்ட்ரலில் இறங்கிய பின்னர் தான் திரும்பியே பார்த்தனராம். அந்த நேரத்தில் ரஜினியின் வேகம்தான் காப்பாற்றியதாக நண்பர்கள் கூட்டத்தில் எப்போதுமே பேச்சு இருக்குமாம்.

Published by
Akhilan

Recent Posts