Connect with us
vijay

Cinema News

இது எல்லாமே அவர பாத்து வந்திச்சி!. தளபதியின் அரசியலுக்கு விதை போட்ட அந்த நடிகர்!…

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதை செல்லியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் சில விஜய் ரசிகர்கள் விஜயை பார்த்து ரஜினியும் காப்பி அடிக்கிறார். ஆடியோ லாஞ்சில் குட்டி கதை சொல்வது விஜயின் ஸ்டைல் என்று சொல்லி வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, விஜய் அரசியலுக்கு வருவதே, ரஜினியை பார்த்து தான் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் வழியை தான் விஜய் பின்பற்றி வருகிறார். இதுவரை எல்லா விஷயத்திலும் அப்படி தான். விஜயை பார்த்து ரஜினி குட்டி கதை சொல்கிறார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு.

இதையும் படிங்க-பார்க்கத்தான போற காளையோட ஆட்டத்த! அடுத்தடுத்து குறிவைத்து தாக்கும் ரஜினி – 170ல் இப்படி ஒரு டிவிஸ்டா?

இதனை அதீத கற்பனை என்று தான் நான் கூறுவேன். முதன்முதலில் குட்டி கதை  சொன்ன ஆரம்பித்ததே ரஜினி தான். ரஜினியை பார்த்து தான் விஜயே குட்டி கதை சொல்ல தொடங்கினார். சமீப காலமாக, ரஜினிக்கு மேடை கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் பேசவில்லை. எப்பயுமே ரஜினி எதையாவது சொல்லவேண்டுமென்றால், ஒரு கதை சொல்லி தான் கூறுவார்.

இப்போதும் அதையே செய்திருக்கிறார். இது மட்டுமல்ல, சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவது, ஹீரோக்கள் எப்போதும் கம்பீரமாக நடிக்கும் படி இருந்த தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றியது ரஜினி. ஹீரோக்களும் காமெடி பண்ணும் ஸ்டைலை தொடங்கியதே ரஜினி தான். அதை தான் விஜய் பின்பற்றினார்.

விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ரஜினியை பார்த்து தான். அரசியலுக்கு வருவது கூட ரஜினியை பார்த்து தான். ஒருவேளை விஜய் நான் அரசியலுக்கு வரவில்லை. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறினால் அதுவும் ரஜினியை பார்த்து தான். மேலும் இப்போது விஜய் அரசியலுக்கு வரப்போகிறார், பாஜகிவின் பின்னணியில் இயங்க போகிறார் என்று ஒரு தகவல் பரவிவருகிறது. அப்படியென்றால் அதுவும் ரஜினியை பார்த்து தான் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- சூடு கண்ட பூனையாக மாறிய நெல்சன் – விஜயை வச்சு பட்டதே போதும்! அலார்ட்டா இருக்காருய்யா

google news
Continue Reading

More in Cinema News

To Top