ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்??... அடேங்கப்பா இது நம்ம லிஸ்டலயே இல்லையே!!

Rajinikanth
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளிவருகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.

Jailer
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்படம் குறித்த ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சூர்யாவின் “ஜெய் பீம்” திரைப்படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளாராம். தா.செ.ஞானவேல் ரஜினியை சந்தித்து “ஜெய் பீம்” பாணியில் ஒரு கதையை கூறியிருக்கிறாராம். அந்த கதை ரஜினிகாந்த்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். தற்போது தா.செ.ஞானவேல் ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறாராம்.
இதையும் படிங்க: “நடிகர்கள் சம்பளத்தை முடிவு செய்றது யார்ன்னு தெரியுமா??”… கம்பீர பதிலால் தூக்கி அடித்த விஜயகாந்த்…

Rajinikanth and TJ Gnanavel
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சிபி சக்ரவர்த்தியுடன் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த புராஜக்ட் நின்றுபோனதாகவும் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில்தான் தற்போது ரஜினிகாந்த், தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவருகிறது.