ரஜினி திரைத்துறையில் கால் பதிக்கும் போது, கமல் அந்த சமயம் பெரிய ஹீரோவாக இருந்தார். முதலில் ரஜினி வில்லனாகத்தான் அறிமுகமானார். பல படங்களில் ரஜினி வில்லனாக நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் தான்.
பிறகு இருவரும் இணைந்து அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இரண்டு ஹீரோ திரைப்படங்களாக நடித்தி வந்தனர். அந்த சமயம் இருவருக்குமே ரசிகர் பட்டாளங்கள் பெருகி இருந்தன.
அப்போது சிங்கப்பூரில் நடைபெற்ற நினைத்தால் இனிக்கும் படப்பிடிப்பு நேரத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் கமல்ஹாசன் தனக்கு அதிகமான காட்சிகள் வேண்டும் எனக்கு நன்றாக நடனம் ஆட தெரியும் என்று பாலசந்தரிடம் கூற, இதனை கவனித்த உடனே ரஜினியும் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் கமல்ஹாசன் தான் பெரிய ஹீரோ அவருக்கு நிறைய காட்சிகள் ஒதுக்குங்கள் என்று அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் – அரைச்ச மாவை எத்தனை தடவைதான் அரைப்பீங்க.!? விக்ரம் என்ன செய்கிறார் தெரியுமா.?!
அதன்பிறகுதான் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து முடிவெடுத்து தங்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதனால் இனிமேல் இருவரும் தனித்தனியாக படங்களில் நடிப்போம் என்று கூறி அதன் பிறகு தனி தனி பாதைகளில் நடிக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு வெளியான அனைத்துரஜினி – கமல் திரைப்படங்களுமே ரஜினி – கமல் எனும் இரு பெரும் நட்சத்திரங்களின் திரை மோதல்களாக விளம்பரப்படுத்தப்பட்டு பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து பெற்றன.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…