இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!

by Akhilan |
இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!
X

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்து அவரை பெரிய அளவில் உயர்த்தி இருந்தாலும் தன்னுடைய குணத்தில் மாறாமல் இருப்பவர். முரட்டுத்தனம் இருந்தாலும் அவர் தன்னுடன் இருப்பவர்களிடம் திமிரை காட்டவே மாட்டாராம். அப்படி ரஜினி செய்த சம்பவங்கள் ஒன்று குறித்த தகவல்கள்.

கோலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் பலரும் கொஞ்சம் சீன் போடுவது தான் வழக்கம். ஷூட்டிங்கில் கூட தங்களுக்கு சொகுசாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அதையெல்லாம் யோசிக்கவே மாட்டாராம்.

இதையும் படிங்க: கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…

ஷூட்டிங் சென்று கட்டாந்தரையில் படுத்த அனுபவமெல்லாம் அவருக்கு இருக்கிறதாம். அவர் நடித்த "ரகுபதி ராகவன் ராஜாராம்", "ஆயிரம் ஜென்மங்கள்", "சதுரங்கம்" உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் துரை. இதில், ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில் நடைபெற்றது.

அங்கு படக்குழு தங்க மூன்று அறைகள் தான் ஒதுக்கப்பட்டதாம். முதல் அறையை அப்போது பிரபலமாக இருந்த விஜயகுமார் எடுத்து கொள்கிறார். இரண்டாவது அறையை நடிகை லதா எடுத்து கொள்கிறார். மூன்றாவது அறையில் ஒரு கட்டில் கீழே படுக்கை ஒன்று விரிக்கப்பட்டு இருந்ததாம்.

இதையும் படிங்க: ‘சொர்க்கமே என்றாலும்’ ஸ்டைலில் ரைடு போகும் விஜய்! ‘கோட்’ பட செட்டில் இருந்து வெளியான வீடியோ

இயக்குனருடன் தான் ரஜினி தங்க வேண்டிய நிலை. இயக்குனருக்கே தர்மசங்கடமாக இருந்தார். ஆனால் ரஜினி எதையுமே யோசிக்காமல் நீங்க மேலே படுத்துக்கோங்க சார். நான் கீழே படுத்துக்கொள்கிறேன் எனக் கூறி கீழே படுத்துக்கொண்டார். அப்படிப்பட்ட தன்மையான நடிகரை நான் பார்த்தது இல்லை என இயக்குனர் துரை பின்னர் பலரிடம் பெருமைப்பட்டு கொண்டாராம்.

Next Story