Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்து அவரை பெரிய அளவில் உயர்த்தி இருந்தாலும் தன்னுடைய குணத்தில் மாறாமல் இருப்பவர். முரட்டுத்தனம் இருந்தாலும் அவர் தன்னுடன் இருப்பவர்களிடம் திமிரை காட்டவே மாட்டாராம். அப்படி ரஜினி செய்த சம்பவங்கள் ஒன்று குறித்த தகவல்கள்.
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் பலரும் கொஞ்சம் சீன் போடுவது தான் வழக்கம். ஷூட்டிங்கில் கூட தங்களுக்கு சொகுசாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அதையெல்லாம் யோசிக்கவே மாட்டாராம்.
இதையும் படிங்க: கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…
ஷூட்டிங் சென்று கட்டாந்தரையில் படுத்த அனுபவமெல்லாம் அவருக்கு இருக்கிறதாம். அவர் நடித்த “ரகுபதி ராகவன் ராஜாராம்”, “ஆயிரம் ஜென்மங்கள்”, “சதுரங்கம்” உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் துரை. இதில், ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் அணைப்பகுதியில் நடைபெற்றது.
அங்கு படக்குழு தங்க மூன்று அறைகள் தான் ஒதுக்கப்பட்டதாம். முதல் அறையை அப்போது பிரபலமாக இருந்த விஜயகுமார் எடுத்து கொள்கிறார். இரண்டாவது அறையை நடிகை லதா எடுத்து கொள்கிறார். மூன்றாவது அறையில் ஒரு கட்டில் கீழே படுக்கை ஒன்று விரிக்கப்பட்டு இருந்ததாம்.
இதையும் படிங்க: ‘சொர்க்கமே என்றாலும்’ ஸ்டைலில் ரைடு போகும் விஜய்! ‘கோட்’ பட செட்டில் இருந்து வெளியான வீடியோ
இயக்குனருடன் தான் ரஜினி தங்க வேண்டிய நிலை. இயக்குனருக்கே தர்மசங்கடமாக இருந்தார். ஆனால் ரஜினி எதையுமே யோசிக்காமல் நீங்க மேலே படுத்துக்கோங்க சார். நான் கீழே படுத்துக்கொள்கிறேன் எனக் கூறி கீழே படுத்துக்கொண்டார். அப்படிப்பட்ட தன்மையான நடிகரை நான் பார்த்தது இல்லை என இயக்குனர் துரை பின்னர் பலரிடம் பெருமைப்பட்டு கொண்டாராம்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…