Categories: latest news tamil movie reviews

மொய்தீன் பாய் மிரட்டினாரா?.. உருட்டினாரா?.. லால் சலாம் லாபம் அள்ளுமா?.. விமர்சனம் இதோ!..

இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தை நம்பி கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்காக கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் எப்போதுமே எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கை தான். இங்கே மத அரசியல் பண்ண நினைத்தாலும் வேலைக்கு ஆகாது.

இதையும் படிங்க: தமிழ்ல பேயோட்டம் ஓடிய கமல் படம்.. அதை விட தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுக்கு காரணமே இதுதானாம்

ப்ளூ ஸ்டார் படம் சமீபத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி அரசியல் பேசியது. அதே போல இந்த படத்தில் 3 ஸ்டார் எனும் கிரிக்கெட் அணி உள்ளது.  விஷ்ணு விஷால் அந்த அணியில் ஆடும் வரை வெற்றி பெறுகிறது. அதன் பின்னர் சில காரணங்களுக்காக அவர் எம்சிசி அணிக்கு செல்கிறார். விஷ்ணு விஷால் தோனி போல அங்கே சென்றதும் அந்த அணி வெற்றி பெற்று வருகிறது.

3 ஸ்டார் அணியை ஜெயிக்க வைக்க மொய்தீன் பாய் மகன் விக்ராந்தை கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளும், ஊரில் தேர்த் திருவிழாவுக்கு எதிராக கிளம்பும் பிரச்சனைகளும் சகோதரர்களாக இருந்து வந்த மக்கள் மதக் கலவரத்தில் ஈடுபட முயல்வதும், கிளைமேக்ஸில் மொய்தீன் பாய் அதை சரி செய்து இந்து மக்களும், இஸ்லாமியர்கள் இணைந்து தேர் திருவிழாவை ஒன்றாக இழுத்து நடத்துவதுடன் படத்தை முடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: தலைவர் என்ட்ரி செம மாஸ்!.. அசத்தல் வசனங்கள்!.. லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்…

மத நல்லிணக்கத்தை நல்ல நோக்கத்துடன் சொல்லியிருக்கிறார். ஆனால், படம் திரைக்கதையில் நிறைய இடங்களில் டல் அடிக்கிறது. ஆரம்பத்தில் ரஜினியை பார்த்ததும் விசில் அடிக்கும் ரசிகர்கள், அதன் பின்னர், மீண்டும் அவர் வரும் வரை காத்திருப்பது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லால் சலாம் – லாஸ் ஆகாது

ரேட்டிங் – 3.25/5.

Published by
Saranya M