போதும்… போதும்.. ரொம்ப லெங்க்தா போது! ஜெய்லர் வெற்றியால் ஜெட் ஸ்பீடில் ரஜினிகாந்த்!
ஜெய்லர் வெற்றியினை பல தரப்பிலும் பயன்படுத்தி கொள்ளும் நான் மட்டும் என்ன சும்மாவா என்ற ரீதியில் தொடர்ச்சியாக சில படங்களில் புக்காகி வருகிறார். இது பல இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் வெற்றியினை தொடர்ந்து தற்போது 170வது பட வேலைகளில் பிஸியாகி இருக்கிறார். ஞானவேல் ராஜா இயக்க இருக்கும் பட்ம் போலி எண்கவுண்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
ஜெய்பீம் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் இப்படம் சமூக பிரச்னையை பேசும் என்கிறார்க்ள். ரத்னவேலாக கலக்கிய ஃபகத் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்து இருக்கிறது. ரொம்ப வருடம் கழித்து அமிதாப் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தினை தொடர்ந்து 171வது ரஜினி படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் நிறைய பிரபலங்கள் இணைய இருக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் இதுவரை தொடங்காத நிலையில் படம் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கி விட்டது.
இதையும் படிங்க: நீ படிச்ச ஸ்கூல அவர் வாத்தியாருப்பா… வசூலுக்காக ரஜினியை சீண்டிய விஜய் தேவரகொண்டா!
என்னவோ ஜெய்லர் வெற்றியில் ரஜினி பரபரப்பாக நடித்து வருகிறார். தொடர்ச்சியாக அவரின் படங்கள் லைன் கட்டி நிற்பது ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.