கொடுத்த கால்ஷீட்டை வீணடித்த ஐஸ்வர்யா?... கடுப்பில் ஃப்ளைட் ஏறிய ரஜினிகாந்த்!..
ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டர் மிக சிறப்பாக இருந்ததாக பல ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இணையத்தில் சிலர் அந்த போஸ்டரை கேலி செய்யத்தொடங்கினர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து கோபத்தில் வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் தற்போது வெளிவருகிறது. “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 5 நாட்களாக ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளை படமாக்கவே இல்லையாம். 5 நாட்களாக ரஜினிகாந்த் சும்மாவே உட்கார்ந்திருந்தாராம். இதனால் கடுப்பான ரஜினிகாந்த், நேராக சென்னைக்கு ஃப்ளைட் ஏறிவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது உலா வருகிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, “ரஜினிகாந்த் அவ்வாறு லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்துவிட்டாலும், அது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரைப்படம். ஆதலால் அவர் நிச்சயமாக நடிப்பார். மேலும் சென்னையில் டி.ராஜேந்தருக்கு சொந்தமான சிம்பு கார்டன்ஸில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக மும்பை செட்டப் போடப்பட்டிருந்தது. அந்த செட் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆதலால் லால் சலாம் படக்குழுவினர் ரஜினியை சென்னையிலேயே சிம்பு கார்டன்ஸில் வைத்து படமாக்கவுள்ளனர்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி படத்திற்காக ரெக்கார்டு பண்ண பாடல்! – எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற சம்பவம்.. எப்படி தெரியுமா?