Rajinikanth: பொதுவாக ரஜினி ஒரு கமர்ஷியல் ஹீரோ தான் என்ற அடையாளம் தற்போதைய காலத்தில் கோலிவுட்டில் நிறையவே இருக்கிறது. ஆனால் ரஜினிகாந்த்ம் தன்னுடைய நிறைய படங்களில் தன்னுடைய உயிரையே பனையும் வைத்து நடித்த சில காட்சிகளும் உள்ளது என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டுக்கு ரஜினிகாந்த் முதல் முதலில் நடிக்க வரும்போது அவர் வில்லனாகவே தன்னுடைய கெரியரை தொடங்கினார். பின்னர், சில காலங்களில், தன்னை ஒரு ஹீரோவாக ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார். அந்த சமயத்தில் தான் அவருக்கு முரட்டுக்காளை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏவிஎம்மும் குறிப்பிட்ட காலத்தில் நிறைய தோல்விகளில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவி மெய்யப்பன் ஆசைப்படுகிறார்.
இதையும் படிங்க: முதல் மனைவி மகள்களை டாக்டராக்கிய விஜயகுமார்… மஞ்சுளா மகள்களுக்கு செய்த துரோகம்… வசைப்பாடும் பிரபலம்
அப்படத்தினை முத்துராமன் இயக்க இருப்பதாக திட்டமிடுகின்றனர். ஆனால் சிறிது காலத்திலேயே மெய்யப்பன் இறந்து விடுகிறார். படம் நடைபெறாது என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம் சரவணன் தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்ற முரட்டுக்காளை படத்தை உடனே தயாரிக்க முடிவு செய்கிறார். படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஜெய்சங்கரை முத்துராமன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்கிறார்.
அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரும் முத்துராமன் சொல்வதை கேட்டு முதன்முதலாக வில்லனாக முரட்டுக்காளை படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி மற்றும் காரைக்குடி சுற்றிய பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுவதே ட்ரெயினில் நடக்கும் சண்டை காட்சிதான். ரயிலின் உச்சியில் நடக்கும் இக்காட்சியை ஜூடோ கே. கே. ரத்தினம் இயக்கி இருந்தார். தென்காசி ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.
ரயிலை வாடகைக்கு எடுத்து மதியத்தில் காட்சியை படமாக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது படத்தின் ஒளிப்பதிவாளர் பாபுவும் அவரது உதவியாளர்களும் கேமராவை ரயில் என்ஜின் முன்புறம் வைத்து ஷூட் செய்வார்கள். அப்படி ஒரு காட்சியில் ரஜினி நின்று கொண்டே ரயில் மீது சண்டை போட்டபடி வருவார். பாலம் வரும்போது குனிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கின்றனர்.
படக்குழு ஒரு பாலத்துக்கு குனிந்துக்கொள்ள சத்தம் போட்டும் ரஜினியும், ஸ்டண்ட் நடிகருக்கும் காதில் விழாமல் குனியாமலே இருந்தனராம். அடுத்து என்ன நடக்குமோ என பயத்தில் முத்துராமன் முதற்கொண்டு படக்குழு இருக்க ஒரு நொடி இடைவெளியில் பாலத்தில் ரஜினி தலை தட்ட போகிறதாம். அதற்குள் ரஜினி சுதாரித்துக்கொண்டு குனிந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…