நீச்சல் தெரியாமல் கடலில் சிக்கிக்கொண்ட ரஜினி… பதறித்துடித்த படக்குழு… பின்னர் என்ன ஆனது தெரியுமா?
Rajinikanth: பொதுவாக ரஜினி எப்பையுமே தன்னுடைய படத்துக்கு அதீத உழைப்பை கொடுப்பார். தனக்கு தெரிகிறதோ இல்லையோ அந்த விஷயத்தினை தைரியமாக செய்து அசத்திவிடுவார். ஆனால் அது பல சமயங்களில் அவர் உயிருக்கே உலைக்கு வைக்கும் நிலைக்கும் சென்றுள்ளது.
இப்படித்தான் ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா இணைந்து நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. இப்படத்தினை எஸ் பி முத்துராமன் இருப்பார். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரஜினிகாந்த் கேரியரில் முக்கிய இடம் பிடித்தது.
இதையும் படிங்க: ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…
இப்படத்தின் ஷூட்டிங்கில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்ததாம். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் ஒரு பாறையில் நின்று சிவகுமாரும் ரஜினிகாந்த்தும் பேசுவது போல ஒரு காட்சி படமாகி கொண்டிருந்தது. அங்கிருந்த சிலர் ரொம்ப நேரம் இருக்க சொல்லாதீங்க தண்ணி மேலே வந்து விடும் என எச்சரித்து விட்டு சென்றார்களாம்.
ஆனால் படக்குழு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். நேரம் ஆக ஆக மேலே ஏறிய தண்ணி ஒரு கட்டத்தில் பெரிய அலையாக வந்து ரஜினிகாந்த் மற்றும் சிவகுமாரை அடித்து உள்ளே இழுத்து சென்றது. இதனால் படக்குழு ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டனர். இதில் ரஜினிக்கு சுத்தமாக நீச்சலே தெரியாது என்பதால் அவரின் நிலை குறித்து படக்குழுவுக்கு பயமே வந்து விட்டதாம்.
இதையும் படிங்க: அண்ணனுக்காக சூப்பர்ஸ்டார் படத்தையே ஸ்டாப் பண்ண அட்லீ!… டைட்டில் தாங்க மாஸ்…
நல்ல வேலையாக அங்கிருந்த மீனவர்கள் ஒரு சிலர் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து சிவகுமார் மற்றும் ரஜினியை தேடிப் பிடித்து வெளியில் இழுத்து வந்த கரையில் போட்டனர். இதில் ரஜினி நிறைய தண்ணீர் கொடுத்ததால் மயக்கமாக்கி விட்டாராம். பட குழு அழுது கொண்டே அவருக்கு முதலுதவி செய்து அவர் கண் திறந்த உடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.