ரஜினிகாந்த் உருகி உருகி காதலித்த டாப் ஹீரோயின்… ஆனா கடைசில என்ன ஆச்சு தெரியுமா??
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், கடந்த 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் செய்துகொண்டார் என்பதும் அவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய மகள்கள் உண்டு என்பதும் ஊர் அறிந்ததே.
இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் ஒரு திடுக்கிடும் தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ரஜினிகாந்த் பிரபல நடிகையான ஸ்ரீதேவியை மிகத்தீவிரமாக காதலித்தாராம். ரஜினிகாந்த் கறுப்பு நிறத்தவர் என்பதனால் அவருக்கு வெள்ளை நிற ஹீரோயின்களை மிகவும் பிடிக்குமாம். நடிக்க வந்த புதிதில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை மிகவும் நேசித்தாராம்.
சிறு வயதிலேயே ரஜினிகாந்த் தனது தாயாரை இழந்ததால் அவர் தாயன்புக்கு ஏங்கினாராம். அதன் காரணமாகத்தான் ஸ்ரீதேவியை காதலித்தாராம். இதனை தொடர்ந்து ஒரு நாள் நேராக ஸ்ரீதேவியின் வீட்டிற்கே சென்று அவரது அம்மாவிடம் பெண் கேட்டாராம் ரஜினிகாந்த்.
“நான் இப்போது நன்றாக சம்பாதிக்கிறேன். நான் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைக்கிறேன். ஆதலால் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் தாயாரிடம் கெஞ்சினாராம்.
அதற்கு ஸ்ரீதேவியின் தாயார் “நீங்கள் நன்றாக சம்பாதிக்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு முன் கமல்ஹாசன் கூட ஸ்ரீதேவியை பெண் கேட்டு வந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
இதையும் படிங்க: “என்ன நடந்தாலும் இதை மட்டும் பண்ணிடாதீங்க”… தனது பிள்ளைகளிடம் சத்தியம் வாங்கிய சூப்பர் ஸ்டார்… என்னவா இருக்கும்??
ஸ்ரீதேவி இப்போதுதான் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறாள். அவள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆதலால் இப்போதைக்கு ஸ்ரீதேவிக்கு திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என்று கூறி ரஜினியை அனுப்பி வைத்தாராம். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.