பாட்ஷா படத்தில் இந்த பஞ்ச் இப்படி தான் உருவாச்சா... கசிந்த சூப்பர் தகவல்...

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் முக்கியமான ஒரு பஞ்ச் டயலாக் எப்படி உருவானது என்ற முக்கிய தகவல்கள் வெளியாகியது.

1995ல் வெளிவந்த திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மாணிக்கம் என்ற ஆட்டோகாரராகவும், பாட்ஷா என்ற மும்பை தாதா என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ரஜினியின் கேரியரில் முக்கிய பங்கு பாட்ஷா படத்துக்கு உள்ளது.

பாட்ஷா

பாட்ஷா

கிட்டத்தட்ட 15 மாதங்கள் திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் ரஜினிக்கு நான்கு பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடி இருந்தார். படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பாலகுமாரன் வசனங்களை எழுதி இருந்தார். ரஜினிகாந்தின் முக்கிய பஞ்ச் டயலாக்குகள் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படத்தில் ரஜினிகாந்தின் முக்கிய வசனமாக நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக் பெரிய வரவேற்பினை பெற்றது. பல வருடங்களை கடந்தாலும் இன்று வரை ரசிகர்களிடம் உலா வருகிறது. இந்நிலையில் இந்த வசனத்தினை ரஜினிகாந்த் முதலில் மொக்கையாக இருப்பதாக கருதினாராம்.

பாட்ஷா

பாட்ஷா

ஏனென்றால்,முதலில் இந்த டயலாக் நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி எனத் தான் இருந்ததாம். அதனை ரஜினிகாந்தும் தொடர்ந்து சொல்லி பார்த்தாராம். ஆனால் எதுவுவோ நெருடலாக இருந்ததாம். இதை தொடர்ந்து வாட்டி என்ற வார்த்தையினை எடுத்து விட்டு தடவை எனப்போட்டு இருக்கிறார். அப்போதே அவருக்கு திருப்தி ஏற்பட்டதாம். பிறகுதான், “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” எனப் பேசி மாஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it