Cinema News
“ரஜினியை கட்டி வச்சி அடிக்கனும்”… ஷூட்டிங்கையே நிறுத்திய தயாரிப்பாளர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா??
1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாட்ஷா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆர் எம் வீரப்பன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“பாட்ஷா” திரைப்படம் ரஜினிகாந்த்தின் கேரியரிலேயே மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்தது. இத்திரைப்படத்திற்குப் பிறகுதான் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேச்சுக்கள் பரவலாக அடிபட்டன.
பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி”, “சார், என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு” போன்ற மாஸான வசனங்கள் ரசிகர்களை புல்லரிக்கச் செய்தது. இப்போதும் இந்த வசனங்கள் மாஸான வசனங்களாக திகழ்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா “பாட்ஷா” படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “பாட்ஷா” திரைப்படத்தில் ரஜினிகாந்த்தை கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற காட்சியை சுரேஷ் கிருஷ்ணா இயக்க இருக்கிறார் என்ற செய்தி தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கு தெரிய வந்தவுடன் உடனே ஷூட்டிங்கை நிறுத்த சொல்லிவிட்டாராம். மேலும் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கும்படியும் கூறினாராம் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.
அதன்படி உடனே தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றாராம் சுரேஷ் கிருஷ்ணா. “சுரேஷ், இன்று ரஜினிகாந்த்தின் லெவல் என்ன என்று தெரியுமா? எம்.ஜி.ஆர் எந்த லெவலில் இருந்தாரோ அதே லெவலில் இப்போது ரஜினி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியை கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பது போல் காட்சியை வைத்தால் தியேட்டரில் திரையை கிழித்துவிடுவார்கள்” என அறிவுரை கூறினாராம்.
இதையும் படிங்க: பாலாவை அடுத்து வெற்றிமாறன்.. வாடிவாசலில் இருந்து வெளியேறும் சூர்யா??
எனினும் ரஜினிகாந்தே நேரில் வந்து அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என கூறிய பின்புதான் தயாரிப்பாளர் அந்த காட்சிக்கு அனுமதி கொடுத்தாராம். அந்த காட்சி எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றிருந்தது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.