தேசிய விருது கேரக்டரை ஆட்டைய போட்டு எடுத்த ரஜினி திரைப்படம்… இதெல்லாம் நடந்துச்சா?
Rajinikanth: ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியின் எவர்கிரீன் ஹிட் படையப்பா படம். 1999 தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியான படம் தமிழ்நாட்டின் எல்லா சென்டர்களிலும் வசூல் மழை பொழிந்தது. முதல் முறையாக உலகம் முழுவதும் 200 பிரிண்டுகளுக்கு மேல் போடப்பட்டு வெளியான தமிழ் படம் என்ற பெருமையும் படையப்பா படத்துக்கு உண்டு.
அந்த காலகட்டத்தில் அதிக வசூலை குவித்த படமாக மாறியது. ரிலீஸுக்கு முன்பே ரூ. 3 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன் மோதும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதுவே படத்தின் வெற்றிக்கும் பெரும் பங்காற்றியது. அத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அப்போதைக்கு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரையும் எடுத்தது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க
படத்தின் நீலாம்பரி கேரக்டர் பொன்னியின் செல்வன் நந்தினி கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதேபோல், ரஜினிக்கு சேர் போடாமல் ரம்யா கிருஷ்ணன் பேசவே, மேலே இருக்கும் ஊஞ்சலை தனது துண்டால் இழுத்து ரஜினி அமர்ந்து பேசும் காட்சியும் தியேட்டரில் பட்டையைக் கிளப்பியது. இந்தக் காட்சி ராமாயணத்தில் இலங்கை செல்லும் அனுமனுக்கு இருக்கை அளிக்காத காட்சியை வைத்து உருவாக்கியிருந்தாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
அதேபோல், வழக்கமான ரஜினி படம் டெம்ப்ளேட்டான வலுவான வில்லன் என்கிற போக்கில் இருந்து மாறுபட்டு அமைந்த வித்தியாசமான ரஜினி படம்தான் படையப்பா. இப்படி பல பெருமைகள் பெற்ற படையப்பா படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அமெரிக்காவில் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டு ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: மொத்த படத்துக்கே ஆறுதானா? தளபதியையே வச்சு செய்த படக்குழு… இதான் விஷயம்…
அதற்குப் பதிலாக இரண்டு இடைவேளைகளை விடலாம் என்றெல்லாம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரஜினி யோசனை சொன்னாராம். அதன்பிறகு, இந்த விவகாரத்தில் நடிகர் கமல் தலையிட்டு, இரண்டு இடைவேளைகள் படத்துக்கு செட் ஆகாது. நீளத்தைக் குறைத்து வெளியிடுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார். கமல் சொன்னபிறகே படத்தின் நீளத்தைக் குறைக்க ரஜினி சம்மதித்தாராம். பொன்னியின் செல்வன் சமீபத்தில் தேசிய விருது வாங்கி இருக்கும் நிலையில் நந்தினி கேரக்டரை ரவிக்குமார் முன்னாடியே எடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம் தானே.