இது என்ன கதை? எங்க தலைவருக்கு இப்படில்லாம் நடக்க கூடாது!.. இயக்குனரிடம் சண்டைக்கு நின்ற ரசிகர்கள்..

by Akhilan |   ( Updated:2024-02-17 16:41:26  )
இது என்ன கதை? எங்க தலைவருக்கு இப்படில்லாம் நடக்க கூடாது!.. இயக்குனரிடம் சண்டைக்கு நின்ற ரசிகர்கள்..
X

Rajinikanth: சினிமாவில் இப்போது இருக்கும் ரசிகர்களை விட 80களில் இருந்த ரசிகர்கள் வேறு ரகம். கிட்டத்தட்ட அந்த கதையை தங்கள் வீட்டில் நடப்பதை போலவே எண்ணினர். அப்படி இருக்க ரஜினிகாந்தின் ஒரு படத்தின் கதைக்கு இயக்குனரிடம் சண்டை போட்ட கதை கூட நடந்து இருக்கிறதாம்.

ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலம் அவர் படத்துக்கு முதல் நாள் ஷோவுக்கே அத்தனை சண்டை இருக்கும். ரஜினிக்காக உயிரை விட கூட ரசிகர்கள் தயாராக இருந்தனர். அந்த ரசிகர்கள் சின்ன கதை மாற்றத்தை கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுக்கு ஒரு படம் உதாரணமாகியது.

இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் ரச்சிதா!..

ராம்கி நடித்த என் கணவர், ரகுவரன் நடித்த உன்னை கண் தேடுதே படங்களை இயக்கியவர் அஸ்வின் குமார். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ஒருநாள் மதுரையை சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர் இவரை வந்து சந்திக்கிறார். கை கொடுக்கும் கை படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்கும் ரேவதியை கற்பழித்து விடுவார்களாம்.

அதன் பின் தலைவர் வாழ்க்கை கொடுப்பாராம். என்ன இருந்தாலும் தலைவர் மனைவிக்கு அப்படி கதை வைக்கலாமா? அதை ஒப்புக் கொள்ள முடியுமா?" என்று கேட்டாராம். இதை கேட்ட குமார், மணியை அழைத்துக்கொண்டு டைரக்டர் மகேந்திரன் வீட்டிற்குச் சென்றார்களாம். மகேந்திரன் விஷயத்தினை கேட்டு அவர்களை அமர வைத்து பேசினாராம்.

இதையும் படிங்க: தளபதி69 இல்லங்க… தளபதி70 தான் விஜயின் கடைசி படம்… கசிந்த மாஸ் அப்டேட்.. போட்றா வெடிய…

எப்படி காட்சியை மாற்றலாம் எனக் கேட்டவர். முடிவை மாற்ற நாளை ஷூட்டிங் வந்து ரஜினியை சந்திக்க சொல்லி இருக்கிறார். அருணாசலம் ஸ்டுடியோவில் நடந்த ஷூட்டிங்கிற்கு ரஜினியை பார்க்க இருவரும் சென்றனராம். விஷயத்தினை கேட்ட ரஜினிகாந்த் 'நீ படம் பாரு. உனக்கு இந்த எண்ணங்கள் வராது. மகேந்திரன் இதை சரியாக கையாண்டு இருக்கார்' என்றாராம்.

படமும் ரிலீஸாக சொன்ன மாதிரியே ரசிகர்கள் முதல் ஷோவை பார்த்துவிட்டு கொதித்துவிட்டனர். இயக்குனர் மகேந்திரனை அடிக்க சிலர் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் குமார் தான் மகேந்திரனை உடனே அங்கிருந்து அனுப்பி வைத்தாராம். இயக்குனர் கதையை நம்பும் அதே அளவு ரசிகர்களின் கருத்தை கேட்பதும் சூப்பர்ஸ்டாரின் குணம் தான்.

Next Story