ரஜினியின் பிறந்தநாளுக்கு 2 இல்ல!.. மொத்தம் 3 ட்ரீட்.. நடந்தா நல்லாதான் இருக்கும்?…

Published on: December 1, 2024
rajinikanth
---Advertisement---

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அப்டேட்டுகளும், புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்த நிலையிலும் தற்போது வரை இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: புஷ்பா 2 FDFS!.. ஒரு டிக்கெட் 3000 ரூபாயா?.. இப்படியே போனா 3000 கோடி கலெக்ஷன் வரும் போலயே!..

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் சற்று தோல்வி படமாகவே அமைந்தது. இதனால் அடுத்த திரைப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் நடிகர் ரஜினிகாந்த் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.  நடிகர் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில் நிச்சயம் 1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று நம்பப்படுகின்றது.

coolie
coolie

இப்பொழுது படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய கம்பேக்காக இருந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.

இப்படத்தின் ப்ரோமோ சூட் வீடியோ ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் கூலி திரைப்படத்தின் அப்டேட்டும் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதையெல்லாம் தாண்டி ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: அங்க இங்க கைய வச்சு… கடைசியில் கமல்ஹாசனின் அடி மடியில் கை வைத்த அமரன் திரைப்படம்!..

அதாவது நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது தொடர்பான தகவலும் வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பும் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. அப்படி வெளியானால் ரஜினியின் பிறந்தநாளுக்கு ட்ரிபிள் ட்ரீட் தான் இன்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.