நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா… தெலுங்கு பக்கம் சாய்ந்த ரஜினிகாந்த்.. பெத்த கோடி சம்பளமாம்!…

Published on: April 18, 2024
---Advertisement---

Rajinikanth: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு என்னத்தான் ஆச்சு? எனக் கேள்வி எழுப்பும் வகையில் அமைந்து இருக்கிறது சமீபத்திய நிகழ்வுகள். தற்போது இந்த லிஸ்ட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓடிடி நிறுவனங்கள் திரைப்படங்களுக்கான தொகையை உடனே தர முடியாது. படத்தின் வரவேற்பை பொறுத்தே அதற்கு தொகை நிர்ணயிக்கப்படும் என அறிவித்தது. இதனால் ரசிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளத்தினை தமிழ் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியவில்லை. 

இதையும் படிங்க: தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!

முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தினை குறைத்து கொள்ள முன்வரவில்லை. அதற்கு நேர் மாறாக வாரி கொடுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பக்கம் சாய தொடங்கினர். தனுஷ் தொடங்கிய லிஸ்ட் அடுத்தடுத்த பெரிய தலைகள் சாய்ந்தது. அஜித்துக்கு 163 கோடியை குட் பேட் அக்லிக்கு சம்பளமாக கொடுத்தனர் மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

அதற்கடுத்து, விஜயின் தளபதி69 திரைப்படத்துக்கு இன்றளவும் அதிகாரப்பூர்வமாக இயக்குனரே தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் சம்பளம் மட்டுமே 250 கோடி என்ற பேச்சுகள் இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகர் என்ற அந்தஸ்த்தினை விஜய் பெற்று இருக்கிறார். இதனால் மற்ற நடிகர்களும் தொடர்ச்சியாக தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கே கொடி பிடிக்க தொடங்கினர்.

இதையும் படிங்க: குருவுக்காக சிஷ்யன் செஞ்ச வேலையை பாருங்க.. ஷங்கர் இல்லத் திருமணத்தில் முகத்திரையை கிழித்த அட்லீ

அந்தவகையில்,  ஜெயிலர் வெற்றியால் பம்பரமாக சுற்றி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ச்சியாக வேட்டையன், தலைவர்171 படங்களை முடித்து இருக்கும் சூப்பர்ஸ்டார் அதற்கடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம். இதில் ஒரு படத்தினை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருக்கிறாராம்.

இப்படத்திற்காக ரஜினிகாந்துக்கு அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு முன்னர் வாரிசு படத்தினை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நல்ல வசூலை குவித்தது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.