இந்த வசனத்தை பேசமாட்டேன்- ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்னவா இருக்கும்!

by Arun Prasad |   ( Updated:2023-04-15 05:58:32  )
Rajinikanth
X

Rajinikanth

ரஜினிகாந்த் நடித்த “பாட்ஷா” திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தபோது ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு குறித்தான பேச்சுக்கள் பரவலாக அடிபட்டன. அதன் பின் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தான எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளதாகவும் தேதி பின்னால் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு “இனி அரசியலுக்கே வரப்போவதில்லை” என கூறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா “கோச்சடையான்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே நடந்த விவாதத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“கோச்சடையான்” திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ரமேஷ் கண்ணாவும் பணியாற்றினாராம். படப்பிடிப்பின்போது அவர்தான் வசனங்களை படித்துக்காட்டுவாராம். அப்போது நடிகர் நாசர் “காலையில் நீ சூரியனை பார்க்கமுடியாது” என்ற வசனத்தை கூறும்போது அதற்கு பதிலாக ரஜினிகாந்த், “அந்த சூரியன் கூட என்னைக் கேட்டுத்தான் எழும், விழும்” என்று ஒரு வசனத்தை பேசவேண்டுமாம்.

ரமேஷ் கண்ணா இவ்வாறு வசனத்தை படுத்துக்காட்டியபோது அதனை கேட்டுக்கொண்டிருந்த ரஜினிகாந்த், “என்னது, சூரியன் என்னை கேட்டுத்தான் எழும் விழுமா? இந்த வசனம் எல்லாம் எதுக்கு. இது வேற எங்கேயோ டச் ஆகுதே” என்று அந்த வசனத்தை பேசமாட்டேன் என கூறினாராம்.

அப்போது இயக்குனர் அவரை சம்மதிக்க வைக்க முயன்றார். அதற்கு ரஜினிகாந்த், “இப்படித்தான் முத்து படத்துல் ‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துடுவேன்’ என்று ஒரு வசனத்தை கொடுத்து பேசவைத்தீர்கள். இன்று வரை எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என்று என்னை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறினாராம். ஆனாலும் படக்குழுவினர் அவரை சம்மதிக்க வைக்க முயற்சி எடுத்தனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்ததாம். அப்படியும் அந்த வசனத்தை ரஜினிகாந்த் பேச மறுத்துவிட்டாராம்.

Next Story