எனக்கே ஸ்கெட்ச்சா? தளபதியை ஓவர் டேக் செய்த ரஜினிகாந்த்… கூலி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் அவர் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் விஜயை தலைவர் ஓவர்டேக் செஞ்சிட்டாரே எனவும் கிசுகிசுக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் எப்போதுமே ஒவ்வொரு படத்துக்கும் கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் ஒவ்வொரு படத்துக்கும் நடிகர்கள் சம்பளம் குறித்த தகவல் பெரிய அளவில் வைரலாக பேசப்படும். முக்கியமாக சம்பளம் தான் நடிகரின் இடத்தினை கோலிவுட்டில் அங்கீகரிக்கும்.

இதையும் படிங்க: டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

அப்படி கோலிவுட்டில் தற்போதைய படத்தில் அதிக சம்பளம் வாங்குவது என்னவோ விஜய் தான். லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு படத்துக்கும் 50 கோடி ரூபாய் சம்பளத்தினை அதிகரித்து இருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தளபதி69 படத்தில் 250 கோடி ரூபாயை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனால் விஜய் தன்னுடைய கடைசி படத்தில் இந்த சம்பளம் வாங்க இருப்பதால் அது அவருடைய கடைசி சம்பள கணக்காவே இருக்கும். தற்போது இந்த சம்பளத்தினை தலைவர் ரஜினிகாந்த் முந்தி இருக்கிறார். அதாவது கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு சம்பளமாக 260 கோடி ரூபாய் பேசப்பட்டு இருக்கிறதாம்.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். அவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்பதாலும் இனி ரஜினிகாந்த் தான் முதலிடத்தினை பிடிப்பார். அவரை மற்ற நடிகர்களால் தாண்ட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: விஜய் தூக்கத்தை கெடுக்க முடிவு கட்டிய ரஜினிகாந்த்?.. 300 கோடி, 1100 கோடின்னு எகிறுதே!..

 

Related Articles

Next Story