வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி....

Vijyakanth: திரைப்பட நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்த செய்தி தமிழக மெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் அவரின் உடல் அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின் அவரின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நேரில் வரமுடியாத நடிகர் டிவிட்டரில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் ரஜினி நேற்று தூத்துக்குடியில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு விமானம் பிடித்து சென்னை வந்தார்.
இதையும் படிங்க: ரியல் போலிஸுக்கே டஃப் கொடுத்த விஜயகாந்த்! காவல்துறை அதிகாரியாக பட்டைய கிளப்பிய படங்கள்
அதன்பின் 10.30 மணியளவில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். பிரேமலதாவிடம் துக்கம் விசாரித்த ரஜினி, விஜயகாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து வணங்கினார். அதன்பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
விஜயகாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருடன் பழகும் எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கொஞ்ச நேரம் பழகிவிட்டால் அவருடனயே இருக்க தோன்றும். மிகவும் தைரியமானவர். அன்பானவர். அவரை பற்றி நினைவு கூற எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க: வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி….
ஒருமுறை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது எனது வீட்டை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். போலீசாராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அங்கு வந்த விஜயகாந்த் அந்த கூட்டத்தை கலைத்துவிட்டார். உங்க வீட்டுக்கு பக்கத்துலயே எனக்கு ஒரு ரூம் போட்டு கொடுங்க. யார் வறாங்கன்னு நான் பாக்குறேன் என சொன்னார். சிங்கப்பூரில் நான் சிகிச்சையில் இருந்தபோதும் அப்படித்தான் கூட்டத்தை விரட்டி விட்டார். இப்படி அவருடன் எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நிற்பவர் யார்? என்பதுதான் விஷயம். விஜயகாந்த் அப்படி மக்கள் மனதில் என்றும் நினைத்திருப்பார்’ என ரஜினி பேசியிருந்தார்.