தேசிய விருது விழாவில் ரஜினி, தனுஷ் - வைரல் புகைப்படங்கள்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 67வது தேசிய விருது விழா வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை டெல்லியில் துவங்கியது.
தமிழில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான் விருதும், பார்த்திபனுக்கு ஒத்த செருப்பு படத்திற்காகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், 47 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்துகு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டது. அந்த விருதும் இந்த விழாவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. அதேபோல் அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இயக்குனர் வெற்றிமாறானும், கலைப்புலி தாணுவும் பெறுகின்றனர்.
எனவே, இவர்கள் அனைவரும் டெல்லி சென்றுள்ளனர். ரஜினி தனது மனைவி லதா, மகள் சௌந்தர்யா மற்றும் தனுஷுடன் சென்றுள்ளார். துணை குடியரசுத்தலைவர் வெங்கய நாயுடு இந்த விருதினை வழங்குகிறார்.
இந்நிலையில், அந்த விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாதா சாகேப் பால்கே விருது பெறும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.