More
Categories: Cinema News latest news

ரஜினிகாந்தோட அந்த மெகா ஹிட் பாட்டு!.. லியோவில் வச்சு மாஸ் பண்ண லோகி.. விஜய் ரசிகர்கள் அப்செட்?..

நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே பிரச்சனை என இருதரப்பு ரசிகர்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் போட்டி முதல் சூப்பர் ஸ்டார் போட்டி வரை சண்டை போட்டு இரு நடிகர்களையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், லியோ படம் வெற்றியடைய வேண்டும் எனது நடிகர் ரஜினிகாந்த் ஆண்டவனை வேண்டிக் கொள்வதும், லியோ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன் படத்தின் “ நான் பொல்லாதவன்” பாடலை விஜய் இடம்பெற ஒத்துக் கொள்வதுமாக இருவருக்கும் இடையே அதே நட்புறவு பலமாக இருப்பதையே காண முடிகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: உங்கள வச்சி படம் பண்ண முடியாது!. விஜய்க்கு ‘நோ’ சொல்லிவிட்டு சிம்புவிடம் போன இயக்குனர்!…

லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் பல பழைய பாடல்கள் இடம்பெற்று ரசிகர்களை ரொம்பவே கனெக்ட் செய்த நிலையில், விக்ரம் படத்திலும் அந்த ட்ரீட்மென்ட்டை வைத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் லியோ படத்தில் ரசிகர்கள் நிச்சயம் அதை எதிர்பார்ப்பார்ப்பார்கள் என அறிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் ”கரு கரு கருப்பாயி”, “தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் சண்டையே வந்தது இல்லை” மற்றும் கிளைமேக்ஸில் ரஜினிகாந்தின் ரெஃபரன்ஸாக “நான் பொல்லாதவன்” பாடலை வைத்து ரசிகர்களை ஹேப்பியாக நினைத்தாரோ அல்லது அடுத்து தலைவர் 171 படத்தை இயக்குவதால் ரஜினிக்கு ஐஸ் வைக்க நினைத்தாரோ தெரியவில்லை.

இதையும் படிங்க: லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

விஜய் ஓகே சொல்லி அந்த சீனில் வாயில் முட்டையை வைத்துக் கொண்டு ரொம்ப க்யூட்டாக நடித்திருந்தார். ஆனால், ஏற்கனவே படத்தில் பல இடங்களில் லோகேஷ் வச்சு செய்த நிலையில், கடைசியாக ரஜினிகாந்த் பாடல் ஒலித்தவுடன் விஜய் ரசிகர்கள் பொல்லாதவர்களாக மாறிவிட்டனர்.

Published by
Saranya M

Recent Posts