Categories: latest news

600 கோடியெல்லாம் இல்லை!.. அதுக்குமேல வேட்டையாட ரெடியான வேட்டையன்!.. ரஜினி எப்படி இருக்காரு பாருங்க!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

மேலும், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் அதிக வசூல் ஈட்டிய படமாக விஜய்யின் லியோ படத்தை பின்னுக்குத்தள்ளி ஜெயிலர் படம் தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அடுத்த மாதம் ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்க உள்ள லால் சலாம் வெளியாகிறது. ஆனால், அந்த படம் எந்தளவுக்கு வசூல் ஈட்டும் என்பது படத்தை பொறுத்து தான்.

இதையும் படிங்க: முடிஞ்சா புடிச்சு பாரு!.. சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் தனுஷ்.. கேப்டன் மில்லர் vs அயலான் வசூல்!

ஆனால், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் வேட்டையன் படம் 600 கோடி வசூலை அசால்ட்டாக தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் இப்போதே கணிக்கத் தொடங்கி விட்டனர். அந்தளவுக்கு படுமாஸாக வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார்.

பாண்டிச்சேரியில் படுபிசியாக அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பவர் ஹவுஸ் ஃபேக்டரியே இணைந்திருக்கிறது.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

ஹீரோயின் போர்ஷனும் சும்மா இல்லை. மலையாளத்தின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசு கொடுக்க நினைத்த வேட்டையன் படக்குழுவினர் லேட்டஸ்ட் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெறித்தனமாக நடிகர் ரஜினிகாந்த் வானத்தைப் பார்த்து சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளன.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago