தன்னை நடிகராக்க பாடுப்பட்ட நண்பன்… அவரை கௌரவித்து அழகு பார்த்த ரஜினிகாந்த்… என்ன நடந்தது தெரியுமா?

by Akhilan |
தன்னை நடிகராக்க பாடுப்பட்ட நண்பன்… அவரை கௌரவித்து அழகு பார்த்த ரஜினிகாந்த்… என்ன நடந்தது தெரியுமா?
X

Rajinikanth: இளைஞராக ரஜினி இருந்த போது அவர் அப்பா கையில் தமிழில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதுகுறித்து ரஜினி தந்தையிடம் கேட்க தந்தை ரானோஜி ராவ் அந்த எழுத்துகள் 'மாணிக்கம்' என்றாராம். தமிழ் தெரியாத ரஜினி அதுக்கு அர்த்தத்தை கேட்டாராம்.

அதற்கு அவர் தந்தை என் தமிழ் நண்பர். ஒரு நாள் அவனும், நானும் நீச்சல் அடிக்கப் போனோம். ஆனால் தண்ணீரிலேயே மாணிக்கம் இறந்துவிட்டார். அவரை நான் தான் அழைத்து சென்றேன். ஆனால் இழந்துவிட்டேன். அதனால் அவனை என் கையில் பச்சை குத்தி இருக்கேன் என்றாராம்.

இதையும் படிங்க: விஜயாவிடம் மாட்ட இருக்கும் மனோஜ்… இதுக்கு பருத்தி மூட்ட குடோனிலே இருக்கலாமே?

அப்பாவை போலவே மகனுக்கும் ஒரு தமிழரே உற்ற நண்பராக மாறுகிறார். அவர் தான் கண்டக்டராக இருந்த ரஜினியை நடிகனாக்கப் பாடுபட்டிருக்கிறார். அந்தத் தமிழன் பெயர் ராஜ்பகதூர். ரஜினியுடன் பணியாற்றியவர். பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் இருந்த ஜெயநகர் வரை செல்லும் 10-ம் எண் பஸ்ஸின் டிரைவர் ராஜ்பகதூர்.

ரஜினிகாந்த் நடிகராக ஜொலிக்க தொடங்கிய பிறகும் ராஜ்பகதூரை தன் நண்பன் அந்தஸ்த்தில் இருந்து குறைக்கவே இல்லை. 1989ம் ஆண்டு டிசம்பர் 14ந் தேதி ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத் திறப்பு விழா நடந்தது. அதில் விஐபி லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருந்தவர் ராஜ்பகதூர். திறப்பு விழா அழைப்பிதழில் அன்றைய முதல்வர் கலைஞர், அர்.எம்.வீரப்பன், ஏவி.எம் சரவணன், சிவாஜி கணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, பஞ்சு அருணாசலம், பாலச்சந்தர், இளையராஜா, இவர்களுடன் சத்தியநாராயணராவ், ராஜ்பகதூர் பெயரும் இருந்தன.

இதையும் படிங்க: இப்படி ஒரு கண்டீசனா? அட்ஜெஸ்மெண்டுக்கு ஓகே சொல்லும் நடிகை.. இவுங்க எங்கேயோ இருக்க வேண்டியது

Next Story