அஜித்துக்கு ரஜினி ரெக்கமன்ட் செய்த திரைப்படம்… பின்னாளில் மாஸ் ஹிட் ஆன தரமான சம்பவம்… இது தெரியாம போச்சே!!

by Arun Prasad |
Billa
X

Billa

ரசிகர்களின் ‘தல’ என்று அறியப்படும் அஜித்குமார், தமிழகத்தின் பெரும்பான்மையான ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருப்பவர். அஜித் பல ஆண்டுகளாக தனது திரைப்படத்தின் எந்த புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. எனினும் அது அவரது திரைப்படங்களின் வெற்றிக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்துவதில்லை.

துணிவு

அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

Thunivu

Thunivu

“நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக “துணிவு” திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

துணிவு VS வாரிசு

அஜித்தின் “துணிவு” திரைப்படமும் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் ஒரே நாளில் மோத உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால் இத்திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Varisu

Varisu

பில்லா

அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “பில்லா”. இத்திரைப்படம் 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான “பில்லா” திரைப்படத்தின் ரீமேக் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துடன் நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: பத்தே நாளில் முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அந்த பிரம்மாண்ட திரைப்படம்… எப்படிப்பா!!

Billa

Billa

“பில்லா” திரைப்படம் அஜித்தின் கேரியரில் ஒரு திருப்பு முனையான திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக இத்திரைப்படம் அஜித்தை ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக அடையாளம் காட்டியது. இந்த நிலையில் “பில்லா” திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த்

“பில்லா” திரைப்படம் உருவாவதற்கு முன்பு, ஒரு நாள் ஒரு விழாவில் அஜித்தை சந்தித்த ரஜினிகாந்த் “உங்கள் படங்கள் எல்லாம் கொஞ்சம் தொய்வாகவே இருக்கிறதே” என கேட்டாராம். அதற்கு அஜித், “ஆமாம் சார். என்ன செய்றதுன்னே தெரியல” என்றாராம்.

Rajinikanth and Ajith

Rajinikanth and Ajith

அப்போது ரஜினிகாந்த் “நீங்கள் எந்த விமர்சனத்திற்கும் கவலையே படாதீர்கள். யார் என்ன சொன்னாலும் அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். ஒரு வளர்ந்து வரும் நடிகரை இப்படித்தான்பேசுவார்கள். நீங்கள் அது குறித்து எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். ஆண்டவனை மட்டும் நம்புங்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருங்கள்” என அஜித்திற்கு ஆலோசனை கூறினாராம்.

மேலும் “உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். செய்கிறீர்களா?” என ரஜினி கேட்டாராம். அதற்கு அஜித் “சொல்லுங்கள், நிச்சயமாக செய்கிறேன்” என்றாராம். “நீங்கள் என்னுடைய பில்லா படத்தை ரீமேக் செய்யுங்கள். நன்றாக வரும்” என கூறினாராம். இதனை தொடர்ந்துதான் “பில்லா” திரைப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என அஜித் முடிவெடுத்தாராம். அத்திரைப்படம் அஜித்திற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story