Connect with us
Rajinikanth and kamal Haasan

Cinema News

இது கமலோட கதை- ரஜினிகாந்த் லெஃப்ட் கையால் தள்ளிவிட்ட ஸ்கிரிப்ட்… என்னவா இருக்கும்!

ரஜினிகாந்த் தொடக்கத்தில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவராக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அதுவும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகு அவரது ரசிகர்கள் விரும்புவது போல் மாஸ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இயக்குனர் எந்த காட்சியை சொன்னாலும் அந்த காட்சியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதையும் கொஞ்சம் அலசிபார்த்துவிட்டே அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வார் ரஜினிகாந்த்.

கலைப்புலி சொன்ன கதை

இவ்வாறு இருக்க, கலைப்புலி எஸ் தாணுவின் நண்பர் ரஜினிக்கு ஒரு கதை கூறியிருக்கிறார். அந்த கதையை கேட்ட ரஜினிகாந்த், ‘இது கமலுக்கு சொல்ல வேண்டிய கதைப்பா” என சிரித்துக்கொண்டே கூறினாராம். அவர் ஏன் அவ்வாறு கூறினார்? அப்படி அந்த கதையில் என்ன இருந்தது?” என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் “அண்ணாமலை” திரைப்படத்திற்கு ஒப்பந்தமாவதற்கு முன்பு, கலைப்புலி எஸ்.தாணு, ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க அவரை அணுகினார். ரஜினிக்கு கதை சொல்வதற்காக ஒரு ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு, தனது நண்பர் கலைப்புலி ஜி.சேகரனுடன் ஹோட்டல் அறைக்கு சென்றிருந்தார்.

அங்கே ரஜினிகாந்திடம் கலைப்புலி ஜி.சேகரன் ஒரு கதையை கூறினாராம். அந்த கதையில் ரஜினிகாந்துக்கு பல காட்சிகளில் சுத்தமாக வசனங்களே இல்லையாம். பல காட்சிகள் கடந்த பிறகு ரஜினிகாந்த் ஹிந்தியில் ஒரு வசனம் பேசுவதாகவும் அதுதான் அவர் பேசும் முதல் வசனமாகவும் கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரஜினிகாந்த், அவர்களுக்கு சாப்பாடு பறிமாறிவிட்டு, கதை சொன்ன ஜி.சேகரனை கொஞ்சம் வெளியே காத்திருக்கும்படி கூறினாராம்.

வசனமே இல்லையே…

அவர் வெளியே சென்றவுடன், ரஜினிகாந்த், “இது என்னப்பா கதை. கமல்ஹாசன் கிட்ட சொல்லவேண்டிய கதையை என் கிட்ட சொல்றீங்களே. 5 ஆவது ரீல் வரைக்கும் சுத்தமா எனக்கு வசனமே இல்லை. அதுக்கப்புறம் ஹிந்தியில் ஏதோ வசனம் இருக்கிறது. இதனை எப்படி எனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்?” என கேட்டாராம்.

ரஜினிகாந்த் அவ்வாறு கேட்டது கலைப்புலி எஸ்.தாணுவுக்கு சரி என்று தோன்றியது. எனினும் ரஜினிகாந்த், “நம்பிக்கையுடன் போய் வாருங்கள். நாளை இன்னொரு கம்பெனியில் இருந்து கதை சொல்ல வருகிறார்கள். அந்த கதையையும் கேட்டுவிட்டு உங்களுக்கு நான் பதில் சொல்கிறேன்” என கூறினாராம். அப்படி அவர் கேட்ட கதைதான் “அண்ணாமலை” கதை. ரஜினிகாந்த் “அண்ணாமலை” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: என்னைய வச்சி படம் எடுத்தா அவ்வளவுதான்- வந்த தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிய ஜெய்சங்கர்… ஏன் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top