ஜெயிலர் 2 நண்பனுக்கு சூப்பர் ஸ்டார் செய்த உதவி!.. மோகன்லாலின் எம்புரான் 2 டிரைலர் எப்படி இருக்கு?..

by Saranya M |   ( Updated:2025-03-20 00:53:16  )
ஜெயிலர் 2 நண்பனுக்கு சூப்பர் ஸ்டார் செய்த உதவி!.. மோகன்லாலின் எம்புரான் 2 டிரைலர் எப்படி இருக்கு?..
X

#image_title

மளையாள நடிகரான பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான படம் லூசிபர். தான் இயக்கிய முதல் படத்திலேயே திரைக்கதை, மேக்கிங், காஸ்டிங் என அனைத்திலும் எந்த குறையும் இல்லாமல் தன் முழு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் பார்ட் 2 எம்புரான் ட்ரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

தாணு தயாரிபில் நடிகர் பிருத்விராஜ் இயக்கிய முதல் மளையாள படமான லூசிபர் படத்தில் அரசியல் தலைவர் ஆட்சியில் இருக்கும் போது மறைந்த பின் அந்த பதவியை கைப்பற்ற அவரது குடும்ம்பத்தில் நடக்கும் போட்டியை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார். இந்த படத்தில் பிருத்விராஜ், மோகன் லால், டோவினோ தாமஸ், கிஷோர், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லூசிபர் மளையாளத்தில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் வெளியாகி வெற்றியாக ஓடியது.

#image_title

லூசிபர் 2ம் பாகம் எம்புரான் எனும் டைட்டிலில் வரும் மார்ச் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நண்பன் மோகன்லாலுக்காக தற்போது ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கதில் லூசிபர் பார்ட் 2 எம்புரான் படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்துள்ளார். மோகன்லாலுக்கும் பிருத்விராஜுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் நடித்துள்ள சிக்கந்தர் படமும் அரசியல் படமாகவே வெளியாகிறது. வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இரண்டு படங்களும் அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகி பாக்ஸ் ஆபீஸ் போட்டியிலும் ஈடுபட உள்ளன.

Next Story