‘உங்களை எனக்கு தெரியும்”… சரியாக அடையாளப்படுத்திய சூப்பர் ஸ்டார்… மனம் நொந்துப்போன தன்ஷிகா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு ஒரு திரைப்படம் பிடித்துவிட்டது என்றால் அத்திரைப்படத்தின் படக்குழுவை அழைத்து பாராட்டிவிட்டு தான் மறுவேலையை கவனிப்பார். அதே போல் ஒரு நபரை எங்கு பார்த்திருந்தாலும் மறுமுறை பார்த்தால் சரியாக எங்கு பார்த்தோம் என ஞாபகம் வைத்திருப்பார் என்பதும் நமக்கு தெரிந்த செய்தியே. இந்த நிலையில் நடிகை தன்ஷிகா வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கபாலி”. இத்திரைப்படத்தில் நடிகை தன்ஷிகா ரஜினியின் மகளாக நடித்திருந்தார். சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் தன்ஷிகா.
இந்த நிலையில் “கபாலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்திருக்கிறார். அப்போது நடிகை தன்ஷிகாவும் இருந்திருக்கிறார். ரஜினி உள்ளே நுழைந்தவுடன் தன்ஷிகாவை பார்த்திருக்கிறார்.
அப்போது தன்ஷிகா “நான் உங்களது மிகப்பெரிய ரசிகன்” என கூறியிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் தன்ஷிகாவை பார்த்து “நான் உங்களை இதற்கு முன் ஒரு விழாவில் பார்த்திருக்கிறேன்” என கூறியிருக்கிறார்.
ஆனால் தன்ஷிகாவிற்கு அப்படி ஒரு விழா நடந்ததே ஞாபகம் இல்லையாம். அதாவது அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததற்கு சில மாதங்களுக்கு முன் தன்ஷிகா கலந்துகொண்ட ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்போதுதான் அவர் தன்ஷிகாவை பார்த்திருக்கிறார். இதனை ரஜினிகாந்த் ஞாபகம் வைத்திருந்து சரியாக கேட்டிருக்கிறார். ஆனால் தன்ஷிகாவிற்கு அப்போது ஞாபகம் வரவில்லையாம்.
அதன் பிறகுதான் தன்ஷிகாவிற்கு தான் கலந்துகொண்ட விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக வந்தது ஞாபகம் வந்ததாம். “ஆஹா, எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். என்னை ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நானோ மறந்துவிட்டேன்” என மனம் நொந்துபோனாராம் தன்ஷிகா.