More
Categories: Cinema History Cinema News latest news

அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் இப்போது தான் ரொம்பவே அமைதியான குணத்தில் இருக்கிறார். ஆனால் இதற்கு முன்னர் எல்லாம் அவரின் சேட்டை கொஞ்சம் அதிகம் தானாம். அப்படி நம்பியாருடன் சென்ற சபரிமலை ட்ரிப்பிலும் சில காமெடிகளை செய்தாராம்.

அப்போதெல்லாம் தமிழ் சினிமா நடிகர்கள் சபரிமலை செல்வதற்கு குரு சாமியாக இருந்தவர் நடிகர் நம்பியார் தான். அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு நம்பியார் தலைமையில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே சபரிமலைக்கு கிளம்பியது. அந்த குழுவில் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், ராஜ்குமார் இயக்குனர் கே விஜயனுடன் ரஜினிகாந்த் சென்றார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!

பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது ரஜினியிடம் குழுவில் வந்த கன்னட டைரக்டர் ஒருவர் உனக்கு நல்ல நேரம் அதனால தான் இப்போ ஓகோனு இருக்க அப்படின்னு சொல்லுகிறார். ஆனால் ரஜினி கொஞ்சமும் யோசிக்காமல் நேரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என் திறமையின் மீது தான் நம்பிக்கை என பதிலடி கொடுத்தார்.

இந்தக் குழுவின் நடை பயணத்தில் களைப்பு தெரியாமல் இருக்க நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிளப்பை தொடங்குகிறார். அந்த கிளப்புக்கு பாவாத்மாக்கள் என பெயர் வைக்கிறார். ரஜினி சபரிமலையில் இந்த கிளப் எதற்கு என அவரிடம் கேள்வி கேட்கிறார். அப்போது ஸ்ரீகாந்த் நான் சொன்னதை சொன்னால்தான் உங்களை எல்லாம் என் கிளப்பில் சேர்த்துக் கொள்வேன் என்கிறார்.

இதையும் படிங்க: எண்ணியது எண்ணியபடி.. சொல்லியது சொல்லியபடி! ‘வாடிவாசல்’ வாகைசூடும்.. என்ன மேட்டர் தெரியுமா?

பாவம் செய்து தான் மலைக்கு வந்திருக்கோம். திரும்பி வந்தும் பாவங்கள் பண்ணுவோம் என கூற சொல்கிறார். இருந்த ஒருவர் ஏன் பாவங்கள் பண்ணாமல் இருக்க முடியாதா? எனக் கேட்க ரஜினிகாந்த் முடியவே முடியாது எனக் கூறிவிடுகிறார். பின்னர், அவரும் அந்த கிளப்பில் ஐக்கியமாகிக் கொள்கிறார்.

இப்படி நடைப்பயணத்தின் களைப்பை போக்க கேலியும் கிண்டலுமாக அந்த குழு சபரிமலைக்கு சென்று வந்ததாக தகவல்கள் தெரிகிறது.

Published by
Akhilan