நான் சூப்பர்ஸ்டார்… ஆனால் என்னால இதெல்லாம் பண்ணவே முடியாது… வருத்தப்பட்ட ரஜினி...
தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், “பைரவி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், தனது ஸ்டைலான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்த ரஜினிகாந்த், ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகழையும் அவரது பணத்தையும் வைத்து அவரால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு உயரத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனாலும் தன்னால் சாதாரண மனிதர்கள் செய்யும் சில விஷயங்களை செய்ய முடியாது என ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரியா பவானி ஷங்கர் ஒரு தீய சக்தி?? அலுவலகத்தில் நடந்த விசித்திர சடங்கு… என்னம்மா சொல்றீங்க!!
சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் கே.பாலச்சந்தர் ரஜினியை பேட்டி கண்டார். அப்போது “நீ கோயிலுக்கு போக முடியாது, சாமி கும்பிட முடியாது, பெட்டி கடையில போய் டீ சாப்பிடமுடியாது, எல்லா சரவண பவன் ஹோட்டலையும் நீ விலைக்கு வாங்கமுடியும். ஆனா அங்கே போய் உன்னால ஒரு காஃபி கூட சாப்பிடமுடியாது. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நீ கொடுத்த விலை என்ன? உன்னோட பிரைவசியே போயிடுச்சே. அதுல உனக்கு வருத்தம் உண்டா?” என பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்டார்.
அதற்கு ரஜினிகாந்த் “எனக்கு வருத்தம் உண்டு. என்னோட நிம்மதி, சந்தோஷம் ரெண்டையும் பறிகொடுத்திருக்கேன். சாதாரண குடிமகனாக என்னால் வெளில நடமாட முடியல. ஒரு கைதி மாதிரி நான் உணர்கிறேன்” என மிகவும் வருத்தத்துடன் பதிலளித்திருந்தார்.