“ராமராஜன் தான் மாஸ்..” ரஜினியை சீண்டிய நபர்.. சூப்பர் ஸ்டாரின் பதில் என்ன தெரியுமா?

1980களில் ரஜினி-கமல் படங்கள் போட்டிப்போட்டு ஓடிய காலத்தில் தனி டிராக்கில் உள்ளே புகுந்து மாஸ் காட்டியவர் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் ரஜினியே விஜயகாந்த்தின் வளர்ச்சியை வியந்து பார்த்ததாகவும் கூறுவார்கள்.

அந்த அளவுக்கு மக்களின் மத்தியில் விஜயகாந்த் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். எனினும் இவர்களுக்கு மத்தியில் இன்னொரு நட்சத்திரம் ஒன்று முளைத்து சைலண்ட்டாக வளர்ந்து வந்தது. அந்த நட்சத்திரம்தான் ராமராஜன்.

ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் தங்களது நடிப்பால் ரசிகர்களை வலைபோட்டு இழுத்துகொண்டிருந்தபோது, ஒரு அப்பாவியான கிராமத்து இளைஞனாக மக்களின் மனதில் பதிந்துபோனவர் ராமராஜன். குறிப்பாக இவரது திரைப்படங்களில் குடிபழக்கம், புகைப்பழக்கம் போன்ற விஷயங்களை ஊக்கப்படுத்துவது போல் எந்த காட்சியிலும் ராமராஜன் நடிக்கமாட்டார். ஆதலால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

“வில்லுப்பாட்டுக்காரன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” என கிராமத்து சாயலில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், ராமராஜன் என்றவுடன் உடனே மக்களுக்கு ஞாபகம் வருவது “கரகாட்டக்காரன்” திரைப்படம் தான். இன்று வரை இத்திரைப்படத்தை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.

இவர் கடைசியாக “மேதை” என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் தலைக்காட்டாத ராமராஜன் தற்போது “சாமானியன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளியானது. பல காலம் கழித்து ராமராஜன் ரீ என்ட்ரி கொடுப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ராமராஜன் வளர்ந்து வந்த காலக்கட்டங்களில் ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் கேரியருக்கு ராமராஜனால் பங்கம் விளையப்போவதாக அன்றைய பத்திரிக்கைகளில் பல செய்திகள் வெளிவந்தன. அந்த அளவிற்கு டாப் நடிகர்களுடன் போட்டிபோட்டு ஓடியது ராமராஜனின் திரைப்படங்கள்.

மேலும் ரஜினியும் விஜயகாந்தும் ராமராஜனின் வளர்ச்சியை பார்த்து பயந்தனர் எனவும் செய்திகள் பரவியது. அப்போது ஒருவர் ரஜினியிடம் “ராமராஜன் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறார். இதனால் உங்களுக்கு பெரிய பிரச்சனை வரும்” என கூறியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் மிகவும் பொறுமையாக “யாராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மார்க்கெட் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் எதிலும் நாம் தலையிடமுடியாது” என கூறினாராம். இந்த செய்தியை மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Related Articles
Next Story
Share it