கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் படையப்பா. இந்த படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். ரஜினியின் திரை வாழ்வில் பாட்ஷாவுக்கு பின் படையப்பா முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பெண்கள் சென்று திரையரங்குகளில் பார்த்தார்கள்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. ரஜினிக்கு மட்டுமில்லாமல் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. இந்நிலையில்தான் ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரின் பிறந்தநாளான வருகிற 12ம் தேதி படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பத்துடன் இப்படம் ரி-ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இதை புரமோட் பண்ணும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ரஜினி. அதில் ‘நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் படையப்பா ரீ-ரிலீஸாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் திரை வாழ்வில் படையப்பா ஒரு முக்கியமான படம்.
பெண்கள் தியேட்டர்களில் கதவுகளை உடைத்து விட்டு சென்று படையப்பா படத்தை பார்த்தார்கள். எனவே நீலாம்பரி என்கிற தலைப்பில் படையப்பா 2 எடுக்கும் எண்ணம் இருக்கிறது. இது தொடர்பான கதை விவாதம் நடந்து வருகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒரு படத்தை கொடுப்போம்’ என்று ரஜினி பேசியிருக்கிறார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
"We are planning for #Padayappa2, titled as #Neelambari, story discussion is going on????. As far as I know Padayappa was the film where Ladies has broken the theatres gate and watched the film❤️????. I didn't give the film for any OTT"
— AmuthaBharathi (@CinemaWithAB) December 8, 2025
– Superstar #Rajinikanth pic.twitter.com/yWMoBYakGp
