இளைஞர்களுக்கு ஒன்னுமே தெரியல!.. கோபப்பட்டு பேசிய ரஜினிகாந்த்!.. இதான் விஷயம்!..

by சிவா |   ( Updated:2025-04-30 06:39:14  )
rajini
X

rajini

நடிகர் ரஜினி வெறும் நடிகர் மட்டுமில்லை. ஆன்மிகம், அரசியல் உள்ளிட்ட பலவற்றிலும் அவருக்கு ஆர்வமுண்டு. அதனால்தான் இரண்டையும் கலந்து ஆன்மிக அரசியல் என்கிற கான்செப்ட்டை கொண்டு வர முடிவு செய்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. அரசியல் தனக்கு செட் ஆகாது என ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால், நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி அவர் பேசாமல் இருப்பது இல்லை. அவர் பேசமால் இருந்தாலும் அவர் விமான நிலையத்திற்கு வரும்போது அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டு அவரிடம் பதிலை வாங்கி விடுகிறார்கள். இதுபோக, எதாவது விழாக்களில் பேசும்போதும் ரஜினி முக்கியமான விஷயங்கள் பற்றி பேசுவார்.

அப்படி ரஜினி பேசுவது கவனம் பெறும். சில நாட்களுக்கு முன்பு திமுக தொடர்பான விழாவில் பேசிய ரஜினி திமுகவில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். கட்சியை விட்டு போகமாட்டேன் என்கிறார்கள். அதிலும் துரைமுருகனை எல்லாம் ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார் என தெரியவில்லை என ஜாலியாக பேச துரைமுருகன் கோபப்பட்டு ‘பல்லு போன வயசுல சினிமால ஹீரோவா நடிக்கும்போது நாங்க அரசியல்ல இருக்கக் கூடாதா?’ என கோபப்பட்டார்.

rajinikanth
rajinikanth

ரஜினி மேடைகளில் பேசும்போது அதில் ஆன்மிகம் கலந்த தத்துவம் கண்டிப்பாக இருக்கும். அவர் எப்போதும் பேச விரும்பும் டாபிக் அது. தமிழ்நாட்டில் இப்போது சிலர் மேடைகளில் குட்டி கதைகள் சொல்வதற்கு முன்னோடியாக இருந்தது அவர்தான். அதேநேரம், ஜெயிலர் பட விழாவில் இவர் சொல்லிய காக்கா - கழுகு கதை விஜய் ரசிகர்களை கொதிப்படைய செய்தது.

இப்போதுவரை அவர்கள் ரஜினியின் மீதும், ரஜினி படங்கள் வெளியாகும்போது அப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கி வருகிறார்கள். இந்நிலையில்தான், ஒரு விழாவில் பேசியுள்ள ரஜினி இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை சொல்லி இருக்கிறார். இப்போதுள்ள செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் பற்றி தெரியாமல் உள்ளனர். நமது நாட்டின் கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.

மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என இந்தியா வருகிறார்கள். ஆனால், நம் நாட்டு இளைஞர்களுக்கு அதன் பெருமை தெரியவில்லை. நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்’ என பேசியிருக்கிறார்.

Next Story