Connect with us

உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம்…சூப்பர்ஸ்டாரிடமே கறார் காட்டிய நிறுவனம்

Cinema News

உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம்…சூப்பர்ஸ்டாரிடமே கறார் காட்டிய நிறுவனம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவருக்கு தான் கோலிவுட்டின் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. சம்பளம் மட்டுமல்லாது சில பகுதிகளின் லாபம் கூட அவருக்கு ஒதுக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் ஒரு படத்திற்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவும். ஆனால், சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகிய படம் எல்லாம் ப்ளாப் ரகங்கள் என்பது அனைவருக்கும் அறிந்த கதை. அதிலும் அண்ணாத்த படம் எல்லாம் சீரியல் ரகம் தான். இதை தொடர்ந்து, அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என ஜெயிலர் டீம் உழைத்து வருகிறது.

annaatthe

இந்நிலையில், ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லைகா நிறுவனம் அப்படத்திற்கு ரஜினிகாந்திற்கு சம்பள அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதில் ஆச்சரியப்படும் தகவலாக, அவரின் சம்பளம் ரூ.75 கோடியாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இதற்கு முன்னர், ரஜினி ஒரு சில படங்களுக்கு 118 கோடி வரை வாங்கியது கூறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜெயிலர் படம் வெற்றியாக அமையும் பட்சத்தில் அவரின் பழைய சம்பளம் மீண்டும் ஏறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நெல்சன் ஜி காப்பாத்திருவீங்களா!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top