ரஜினியுடன் கைகோர்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்....! என்னடா நடக்குது...? படப்பிடிப்பில் கண்ணாமூச்சி ஆடும் திரையுலகம்...
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மும்பை நிழல் உலக தாதாவின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் ஜெய், நடிகை தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க அதே இடத்தில் இன்னொரு செட் போட்டு நடிகர் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
இதையும் படிங்கள் : பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் ட்விஸ்ட்…! அந்த நடிகரின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….
இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தன் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று எல்லாரையும் நலம் விசாரித்து வந்திருக்கிறார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த நடிகர் ஷாரூக்கானும் அவருக்கு சூட்டிங் இல்லாத சமயத்தில் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியுடன் கை குலுக்கி தன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் ஷாரூக்கானின் ஜவான் படத்தை பற்றிய இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஷாரூக்கான் தானாம். அதனால் தயாரிப்பாளர் ஷாருக்கானாக அவர் சூட்டிங் இல்லாத சமயத்தில் 10 மணிக்கே வந்து படப்பிடிப்பு வேலைகளை பார்க்கும் ஷாரூக்கான் நடிகர் ஷாரூக்கானாக 12 மணிக்கு தான் வருகிறாராம் சூட்டிங்கிற்கு. அதே 10 மணிக்கே வந்தால் தாமதமாகாமல் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து விடலாம். அதை அவர் யோசிக்க வேண்டும்.