Connect with us

Cinema History

கண்டக்டர் வேலையே போதும்… நடிப்பை விட்டு பெங்களூர் திரும்பிய ரஜினிகாந்த்… காத்திருந்த அதிர்ச்சி…

Rajinikanth: ரஜினிகாந்த் சினிமாவில் வளர பார்த்துக்கொண்டு இருந்த கண்டெக்டர் வேலையை விட்டுவிட்டு வந்ததாக தான் பலருக்கு தெரியும். ஆனால் அவரை அந்த பணியில் சஸ்பெண்ட் செய்து அவருக்கு ஷாக் கொடுத்த அதிர்ச்சி சம்பவமும் நடந்ததாம்.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடம் நடிப்பு பயிற்சி எடுத்தாகி விட்டது. ஆனால் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்க ரஜினிகாந்த் வெறுத்து போகி தன்னுடைய கண்டக்டர் வேலைக்கு சென்று விடலாம் என பெங்களூருக்கு டிரெயின் ஏறி விடுகிறார். 

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

அப்பொழுது ரஜினிக்கு முன்பாக ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் ரஜினியை சரியாக கண்டக்டர் என கண்டுபிடித்து நான் உங்களை ஜெய் நகர் வண்டியில் பார்த்திருக்கிறேன் என பேச தொடங்குகிறார். என் மகன் பிஎஸ்சி யில் முதல் வகுப்பில் தேர்வு செய்திருக்கிறான். அவனுக்கு நிறைய முறை கண்டக்டர் வேலை எழுதிப் போட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

அதற்காக திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி வருகிறேன் எனக் கூறினாராம். இதைக் கேட்ட ரஜினி பிஎஸ்சி படித்தவருக்கே இத்தனை போராட்டமாக இருக்கும் போது நமக்கு கிடைத்த கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யாமல் இருந்தோமே? அதையே இனிமே பார்த்துக்கொள்ளலாம். 

இனி நடிப்பு வேண்டாம் நம்முடைய கண்டக்டர் வேலையை தொடர்ந்து பார்க்கலாம் என நம்பிக்கையுடன் பெங்களூர் சென்று இருக்கிறார். ட்ரெயினில் இருந்து இறங்கியவர் வீட்டிற்கு செல்ல ஒரு பேருந்தில் ஏறி உட்காருகிறார். அந்த மாநகரப் பேருந்தில் கண்டக்டராக இருந்தவர் ரஜினியின் நண்பர் புட்ராஜ்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் நம்பர் ஓன்…சம்பளமே இத்தனை கோடி… யார் அந்த நடிகை…காலியான லேடி சூப்பர்ஸ்டார்…

அவர் என்ன சிவாஜிராவ் திடீரென பெங்களூரு வந்திருக்க எனக் கேட்கிறார்.தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூர் வந்தேன். வீட்டிற்கு செல்ல இருக்கிறேன் எனவும் கூறுகிறார். சில நாட்களுக்கு முன்னர் 2 வருடங்களாக வேலைக்கு வராத 12 கண்டக்டர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். அதில் உன் பெயரும் இருந்ததாக ஷாக் கொடுக்கிறார்.

இதை கேட்ட ரஜினிக்கு உலகமே நின்றுவிட்டது போல தோன்றியதாம். வீட்டிற்கு சென்று அங்கும் உறவினர்கள் பரிதாபமாக பார்க்க ரஜினிக்கு இனி இங்கு இருப்பது சரியில்லை என தோன்றுகிறது. சென்னைக்கு திரும்பி விடலாம் தெரிந்த நடிப்பு தொழிலையாவது செய்யலாம் என்று முடிவில் அன்று இரவே மீண்டும் சென்னைக்கு ட்ரெயின் ஏறினார். பின்னர் நடந்தது வரலாறு தானே! 

இதையும் படிங்க: தலைவர்171 திரைப்படத்தை தயாரிக்க இருந்தது இந்த நடிகரா? அட மிஸ் பண்ணிட்டாரே!…

google news
Continue Reading

More in Cinema History

To Top