இயக்குனரை பார்த்ததும் ரஜினிகாந்த் பதறிப்போய் செய்த காரியம்… என்ன மனிஷன்யா!!
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், எப்போதும் எளிமையாக இருப்பவர் என பலரும் கூறுவர். இது நமக்கு தெரிந்த விஷயம்தான். அதே போல் சக நடிகரை மதிப்பதிலும் பாராட்டுவதிலும் எந்த தயக்கமும் காட்டமாட்டார் ரஜினி.
வெளியாகும் திரைப்படங்களில் நல்ல திரைப்படங்கள் என்று தோன்றும் திரைப்படங்களின் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவார். மேலும் அவரது பிளஸ்ஸே அவரின் ஞாபக சக்தி தான்.
ஒரு நாள் “கபாலி” படப்பிடிப்பில் தன்ஷிகாவை பார்த்து “உங்களை நான் ஒரு விழாவில் பார்த்திருக்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்” என நலம் விசாரித்தாராம். ஆனால் அப்படி ஒரு விழா நடந்ததையே தன்ஷிகா மறந்துவிட்டிருக்கிறீர்கள். ரஜினி கூறியபின்பு தான் அவருக்கே ஞாபகம் வந்திருக்கிறது. இவ்வாறு தனது சக நடிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் சமீபத்தில் காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன், ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ரஜினிகாந்த் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் ரஜினிகாந்த் படப்பிடிப்பின் போது மீசை ராஜேந்திரனை பார்த்து “உங்களை நான் இதற்கு முன் பார்த்திருக்கிறேன்” என கூறியிருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகர் நம்மை ஞாபகம் வைத்திருக்கிறாரே என அசந்துபோனாராம் மீசை ராஜேந்திரன்.
அப்போது ரஜினிகாந்த் சிக்ரெட் பிடித்துகொண்டிருக்க, இயக்குனர் ஷங்கர் செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஷங்கரை பார்த்ததும் சிக்ரெட்டை கீழே போட்டு மிதித்திருக்கிறார். இதனை பார்த்த மீசை ராஜேந்திரன் “பல ஹீரோக்கள் எல்லாம் இயக்குனரை பார்த்தாலுமே கால் மேல் கால் போட்டு சிக்ரெட் பிடிக்கிறார்கள், ஆனால் இவர் எவ்வளவு பெரிய ஸ்டார். இந்தளவுக்கு மரியாதை கொடுக்கிறாரே” என வியந்தாராம்.
மேலும் மீசை ராஜேந்திரனும் சில நடிகர்களும் சேர் இல்லாமல் நின்றுக்கொண்டிருந்தபோது ரஜினிகாந்த் அங்குள்ளவர்களை பார்த்து “இவர்களும் நடிகர்கள் தானே இவர்களுக்கும் சேர் கொண்டுவாருங்கள்” என கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் சேரில் அமர்ந்தபிறகு தான் ரஜினிகாந்தே அமர்ந்தாராம். இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எந்த கெத்தும் காட்டாமல் சக நடிகருக்கு மதிப்புக்கொடுக்கும் குணம்தான் அவரை இன்றும் சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தி இருக்கிறது.