காகம் மேல பறந்தாலும் கழுகாக மாற முடியாது!.. கீழ விழுந்துடும்!.. தளபதியை அட்டாக் பண்ணும் ரஜினி!..
தமிழ் சினிமாவில் பல வருங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகிலும் அவர்தான் சூப்பர்ஸ்டார். 30 வருடங்களுக்கும் மேல் அந்த பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானில் கூட அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி. ரஜினி நடித்தாலே அந்த படம் ஹிட், தயாரிப்பாளர்களுக்கு லாபம் என்பதுதான் நிரந்தர கணக்காக இருந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாக ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. பாபா படத்தில் துவங்கிய சரிவு அண்ணாத்த வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் பேட்ட திரைப்படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து ஓரளவுக்கு வசூல் செய்தது. எனவே, எப்படியாது ஒரு ஹிட் படத்தை கொடுத்து தன்னுடையை இருப்பை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் ரஜினி இருக்கிறார். எனவே, ஜெயிலர் படம் சிறப்பாக வரவேண்டும் என மொத்த டீமும் உழைப்பை கொட்டியுள்ளனர். ரஜினியும் இப்படத்தை நம்பி காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெயிலர் ஆடியோ விழாவில் அரபிக்குத்து பாட்டு!.. என்னப்பா தெரிஞ்சிதான் செய்றீங்களா!..
ஒருபக்கம், அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான் என்கிற பேச்சும் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது. வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அதை துவங்கி வைக்க பலரும் அதையே கூறினார். விஜயும் அதை ரசித்து வந்தார். அதேபோல், மாவீரன் படவிழாவில் சிவகார்த்திகேயனை எல்லோரும் அடுத்த ரஜினி என்கிற ரேஞ்சுக்கு புகழந்து பேசினார்கள்.
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் பட பாடலில் ‘இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு.. குட்டி செவத்தை எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என வரிகள் வந்தது. இது விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ரஜினி கொடுத்த பதிலாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், நேற்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய ரஜினி வழக்கம்போல் அவரின் ஸ்டைலில் ஒரு குட்டி கதை சொன்னார். ‘காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து அமைதியானது. காகம் உயர பறந்து சென்று பருந்தை கொத்தினாலும் பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால் முடியாது. கீழே விழுந்துவிடும்’ என ரஜினி சொன்னார்.
தன்னை பருந்து என சொல்லும் ரஜினி காக்கா என யாரை சொன்னார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை..
இதையும் படிங்க: ‘காவாலா சாங்’ படப்பிடிப்பின் போது கடுப்பான ரஜினி – தலைவரின் ஆசையை தவிடுபொடியாக்கிய நெல்சன்