தளபதி 66 காட்சிகள் இணையத்தில் லீக்?...அதிர்ந்த போன படக்குழு!...எங்க விஜய் ரெம்ப பாவம்யா....

தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷியாம்,பிரகாஷ் ராஜ், சம்யுக்தா என ஒரு பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஒருசில காட்சிகள் அதாவது ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இதனை சில பிரபல பத்திரிகை நிறுவனங்களே தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டன.

இதையும் படியுங்களேன் - ரசிகர்களை கொலை நடுங்க வைக்க மீண்டும் அவர்கள் வருகிறார்கள்.! குதூகலமான அந்த அறிவிப்பு இதோ.!

இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். இதன் காரணமாக இயக்குனர் தற்போது அப்படி லீக்கான காட்சிகளை மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அதன்படி இணையத்தில் லீக் ஆன காட்சிகள் படத்தில் இடம்பெறாது. அதற்கு பதிலாக புதிய காட்சிகளை ஷூட்டிங் செய்ய தற்போது படக்குழு ஆயத்தமாகி வருகிறதாம்.

ஏற்கனவே தளபதிவிஜய் எப்போது இந்த படத்தை முடித்துவிட்டு விரைவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் எப்போது நடிக்க வருவார்? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வேளையில் இப்படத்தின் சூட்டிங் இன்னும் நீண்டு கொண்டே போகிறது என்ற செய்தி கேட்டவுடன் ரசிகர்கள் சிறிய அப்0செட்டில் இருக்கின்றனராம்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it