ஒரு முட்டைக்காக ரஜினியை அவமானப்படுத்திய நிர்வாகி… திருப்பி அடித்த பளார் சம்பவம்… இது எப்படி இருக்கு!!
ரஜினி இப்போது மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தாலும் தொடக்க காலத்தில் அவரின் நிறத்தை காரணம் காட்டி பலரும் அவரை அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் சினிமாத்துறையில் சிறிய நடிகராக இருப்பவர்களுக்கு மரியாதை கொஞ்சம் கம்மிதான். இப்போதே அப்படி என்றால், ரஜினி நடிக்க வந்த புதிதில் மிகவும் மோசம்.
அவ்வாறு ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில் ஒரு முட்டை கேட்டதற்காக அவருக்கு நடந்த ஒரு அவமானகரமான சம்பவம் குறித்தும் அதனை அவர் எப்படி பின்னாளில் வளர்ந்த பிறகு திருப்பி அடித்தார் என்பது குறித்தும் பார்க்கலாம்.
ரஜினிகாந்த் வெகு சில திரைப்படங்களிலேயே நடித்திருந்த கால கட்டம் அது. அந்த வேளையில் ஒரு திரைப்படத்தில் ரஜினியை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அத்திரைப்படத்தில் கதாநாயகர் வேறு ஒருவர்.
அந்த படப்பிடிப்பில் உணவருந்திகொண்டிருந்தபோது புரொடக்சன் கம்பெனியின் நிர்வாகி ஒருவரிடம் “ஒரு முட்டை கிடைக்குமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிர்வாகி “கோழி இன்னும் முட்டை போடவில்லை. அது முட்டை போட்டவுடன் எடுத்துவிட்டு வந்து கொடுக்கிறேன்” என கேலி செய்யும் வகையில் கூறியிருக்கிறார்.
அதன் பின் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபோது, அதே புரொடக்சன் கம்பெனி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடித்தார் ரஜினிஜாந்த். அப்போது ரஜினிகாந்த் உணவருந்திகொண்டிருந்தபோது அதே புரொடக்சன் நிர்வாகியும் இருந்திருக்கிறார்.
அவரை பார்த்து ரஜினிகாந்த், ஒரு முட்டை கிடைக்குமா என கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி ஓடிப்போய் ஒரு முட்டையை எடுத்து வந்திருக்கிறார். இதனை பார்த்த ரஜினிகாந்த், “இப்போது மட்டும் கோழி முட்டை போட்டிருச்சோ” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட அந்த நிர்வாகி ஷாக் ஆகியுள்ளார். தன்னை அவமானப்படுத்தியவர்களை தனது வெற்றியால் திருப்பி அடித்துள்ளார் ரஜினிகாந்த் என்பது இதில் இருந்து தெரியவருகிறது.