நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில், கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் தமிழ்நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் இந்த படம் பிடித்திருந்தது. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக தலைவர் 170 படத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.
செப்டம்பர் 15ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெபீம் படத்தை இய்கிகய ஞானவேல் இயக்குகிறார். இந்த படம் சமூக நிதி பற்றி பேசும் என்று அவர் கூறியுள்ளார். தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் படம் வெற்றி பெற்றதையடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 3,4 மாதங்கள் கழித்து தான் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திலும் ரஜினி போலீசாக தான் நடிக்கிறார் என்று செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயிலர் படத்தில் மற்ற மொழி நடிகர்களை நடிக்கவைத்து படத்தை எல்லா மாநிலத்திலும் சூப்பர் ஹிட்டாக்கியது போலவே, இந்த படத்திலும், அமிதாப் பட்சன், பகத் பாசில், நானி உள்ளிட்டோரை நடிக்க வைத்து, படத்தை இந்தியா முழுவதும் ஹிட்டாக ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தின் கதை காவல்துறை செய்தும் போலி என்கவுண்டர்களை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என்றும் செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- சும்மா இருக்காம சூடு வச்சிக்கிட்ட ரஜினி… ஆப்பு செம பெரிசா இருக்கும் போலயே!
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…