சினிமாவிற்கு முழுக்கு போடும் ரஜினிகாந்த்..... உண்மை என்ன?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஆரம்ப காலத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக உருவான ரஜினி தனக்கென தனி ஸ்டைலை கொண்டு வந்தார். அதுதான் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
ரஜினி சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலே தனிதான். இதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதுமட்டுமின்றி இவரது நடையும் மாஸாக இருக்கும். இந்த வயதிலும் வேகமாக நடப்பார். இவருக்கு இணையாக நடக்க முடியாது. இந்நிலையில் ரஜினி சினிமாவை விட்டு முற்றிலும் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்ணாத்த படத்திற்கு பின்னர் ரஜினி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது அண்ணாத்த படத்தை அடுத்து இன்னும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு ரஜினி சினிமாவில் இருந்து முழுவதாக ஓய்வு பெற உள்ளாராம்.
இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம்…. அது அப்புடியே கட்டி இழுக்குது – உருகி வழியும் ரசிகர்கள்!
இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல. இருப்பினும் அவரது உடல்நிலையை வைத்து பார்க்கும் போது இது உண்மையாக இருக்கலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு படங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.